கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 17 – இரண்டாவது வீடு வாங்க கடன் வாங்கலாமா?

ல்ல வேலையில், கணிசமான அளவுக்குச் சம்பாதிக்கும் பலருக்கு எதிர்கால இலக்கு களுக்குத் திட்டமிடுவதில் நிறைய குழப்பங்கள் இருக்கவே செய்கின்றன. அப்படிச் செய்யலாமா, இப்படிச் செய்யலாமா எனக் குழம்பிக் கிடக்கும் இவர்கள், ஆரம்பத்திலேயே நல்ல ஆலோசனையைப் பெற்றுவிட்டால், கடன் சுழலில் சிக்காமல் தப்பித்து விடுவார்கள். 

ஆனால், எந்தவிதமான ஆலோசனைகளையும் கேட்காமல், தன் மனதுக்குத் தோன்றியதை எடுத்தோம், கவிழ்த்தோம் என செய்துவிடுகிறவர்களில் பலர், ஏதாவது ஒரு சூழ்நிலையில் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த வகையில் செங்கல் பட்டைச் சேர்ந்த ஆனந்த் கொஞ்சம் முன்யோசனைக் காரர் என்றே சொல்லலாம். இனி ஆனந்த் சொல் வதைக் கேட்போம்…

“எனக்கு வயது 38. நான் ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில்தான் பணிபுரிந்து வருகிறேன். மாத சம்பளம் ரூ.1,02,000.

 

என் மனைவி வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கிறார். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவள் 6-ம் வகுப்பும், இளையவள் 4-ம் வகுப்பும் படிக்கிறார்கள்.

நான் 2011-ல் ரூ.35 லட்சம் மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கினேன். இதற்காக ரூ.15 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினேன். பிறகு டாப்அப் மூலம் ரூ.8 லட்சம் வாங்கினேன். மொத்த வீட்டுக் கடன் ரூ.25 லட்சம். இதற்கான இ.எம்.ஐ ரூ.25,000. இன்னும் 13 வருடங்கள் இ.எம்.ஐ செலுத்த வேண்டும். பர்சனல் லோன் 2014-ல் ரூ.4 லட்சம் வாங்கினேன். அதற்கு ரூ.10,000 இ.எம்.ஐ செலுத்தி வருகிறேன். இது 2020 ஜனவரியில் முடிவடையும்.

கடந்த மாதம் வரையில் வீடு கட்டுவதற்காக நண்பர்கள், உறவினர்களிடம் வாங்கிய கூடுதல் கடன்களை அடைக்க வேண்டியிருந்தது.

கடந்த வருடம் வரையிலான பி.எஃப் தொகை முழுவதையும் எடுத்து, வீட்டுக்காக வாங்கிய கடனை அடைக்கப் பயன்படுத்திக்கொண்டேன். கடந்த ஓராண்டு வரையிலான பி.எஃப் கணக்கு இருப்புத் தொகை ரூ.1 லட்சம் இருக்கக்கூடும்.

எல்லாச் செலவுகளுக்கும் சேர்த்து ரூ.65,000 போக, இந்த மாதம் முதல் மீதம் கையில் ரூ.37,000 இருக்கிறது. தற்போது என்னால் மாதம் ரூ37,000 முதலீடு செய்ய முடியும். 2020 ஜனவரியில் பர்சனல் லோன் முடிந்ததும் ரூ.47,000 வரை முதலீடு செய்ய முடியும்.

இதுவரையில் நான் எந்த முதலீடு களையும் செய்யவில்லை. இன்ஷூரன்ஸ் எதுவும் எடுக்க வில்லை. நிறுவனத்தில் உள்ள மெடிக்ளெய்ம் ரூ.1 லட்சம் தவிர வேறு எந்த இன்ஷூரன்ஸ் பாலிசியையும் நான் எடுக்கவில்லை.

 

 

தற்போது மீதமுள்ள தொகையை உருப்படியான சொத்துகளில் முதலீடு செய்ய நினைக்கிறேன். எனவே, ரூ.43 லட்சம் மதிப்பில் இரண்டாவதாக ஒரு வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளேன். வீட்டுக் கடன் போக, நான் ஏற்பாடு செய்ய வேண்டிய 20% முன்பணத் தொகைக்கு நகையை அடமானம் வைத்துக்கொள்ளலாம் என நினைத்துள்ளேன். என் யோசனை சரியாக இருக்குமா, அதிகமாகக் கடனை வாங்குவதால், ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடுமா எனச் சொன்னால் உதவியாக இருக்கும்” என்றவர், தன் வரவு செலவு விவரங்களை அனுப்பி வைத்தார்.

மாத சம்பளம்: ரூ.1,0,2000

வீட்டுக் கடன் இ.எம்.ஐ: ரூ.25,000

பர்சனல் லோன் இ.எம்.ஐ: ரூ.10,000

பள்ளிக் கட்டணம்: ரூ.15,000

கிரெடிட் கார்டு கட்டணம்: ரூ.5,000

குடும்பச் செலவுகள்: ரூ.10,000

மீதமாகும் தொகை: ரூ.37,000

பி.எஃப் பிடித்தம்: ரூ.8,000+8,000

இனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலி டேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“நீங்கள் ஏற்கெனவே வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி, அந்த வீட்டில் குடியிருந்துவரும் நிலையில் இன்னொரு வீடு வாங்கத் திட்டமிடு வது ஏன் எனப் புரியவில்லை. முதலீட்டு நோக்கில் இரண்டாவது, மூன்றாவது வீடுகளை வாங்கி வாடகைக்கு விடுவது எப்போதுமே பெரிய லாபத்தைத் தராது. அப்படியே இன்னொரு வீடு வாங்குவது உங்கள் ஆசையாக இருப்பின், கையில் பணம் இருந்து வாங்கினாலாவது, லாபம் இல்லா விட்டாலும் சிக்கல் வராமல் இருக்கும். அப்படியில்லாமல், மேலும் வீட்டுக் கடனை வாங்குவது பெரிய அளவில் நிதிச் சிக்கலில் கொண்டுபோய் விடக்கூடும். என்ன மாதிரியான சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என விளக்கமாகச் சொல்கிறேன்.

ரூ.43 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்க 20% முன்பணம் ரூ.8.60 லட்சம் தேவை. இதற்கு நகையை அடமானம் வைக்கும்பட்சத்தில், 12% வட்டி என்ற வகையில் ஆண்டுக்கு ரூ.1.03 லட்சம் வட்டி செலுத்த வேண்டும். மாதம் ரூ.8,600 செலுத்த வேண்டும்.

நகையை மீட்க 36 மாதங்கள் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் நிலையில், அதற்கான தொகையைச் சேர்க்க மாதம் ரூ.20,600 ஒதுக்க வேண்டும். வீட்டுக் கடன் ரூ.34.4 லட்சம் வாங்கினால், 15 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும்பட்சத்தில், ரூ.34,900 இ.எம்.ஐ செலுத்த வேண்டும். ஆக, தோராயமாக ரூ.64,000 வரை மாதாந்திரச் செலவுகளில் கூடுதலாகும்.

பர்சனல் லோன் முடிந்தபிறகு உங்களிடம் இருக்கும் மீதமாகும் தொகை ரூ.47,000. வீட்டு வாடகை ரூ.10,000 வந்தாலும், உங்களுக்கு மாதாந்திர பட்ஜெட்டில் ரூ.7,000 பற்றாக்குறை ஏற்படக்கூடும்.

இந்த பற்றாக்குறையைச் சமாளிக்கவும், ஏதாவது அவசரச் சூழ்நிலைகளிலும் கடனை வாங்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். முக்கிய இலக்குகளான குழந்தைகளின் மேற்படிப்பு, திருமணம், உங்கள் ஓய்வுக் காலம் போன்றவற்றுக்குச் சிறு அளவு தொகையைக்கூட முதலீடு செய்ய முடியாத நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். முக்கியமாக அவசர கால நிதியைக்கூட உருவாக்கிக்கொள்ள முடி யாது. பணநெருக்கடியை உரு வாக்கி, நிம்மதியை இழக்கச் செய்யும் இரண்டாவது வீடு அவசியமா என நீங்கள்தான் யோசிக்க வேண்டும்.

இப்போது மீதமாகும் தொகையை குழந்தைகளின் படிப்பு, திருமணம், உங்கள் ஓய்வுக்காலம், அவசரக் காலம் எனப் பிரித்து முதலீடு செய்யத்தொடங்குங்கள். பர்சனல் லோன் முடிந்ததும் முதலீட்டுத் தொகையை அதிகப்படுத்துங்கள். ரூ.1 கோடிக்கு டேர்ம் பாலிசியும், ரூ.4 லட்சத்துக்கு மெடி க்ளெய்மும் வாங்கிக்கொள் ளுங்கள்.

நிதி சார்ந்த முக்கிய முடிவை எடுக்கும்முன் நீங்கள் ஆலோசனை கேட்ட தால், கடன் சுழலில் சிக்காமல் தப்பித்திருக்கிறீர்கள்,  பாராட்டுக்கள்.”

குறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப் பட்டுள்ளது.!

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

– கா.முத்துசூரியா,  ஓவியம்: ராஜேந்திரன்

This article was posted on- (21/10/2018)-in Nanayam Vikatan

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *