Category Archive: Equity market

May 13

உங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்! – எளிதாக அடையும் வழி

சிறிய உணவகம் ஒன்றில் மாதம் ரூ.15,000 சம்பளத்துக்கு சூப்பர்வைசராகப் பணியாற்றி வரும் கோவையைச் சேர்ந்த சந்திரமோகனுக்கு 62 வயது. கவலையுடன் அவர் தன் கடந்த காலத்தைப் பகிர்ந்துகொண்டார். “நான் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்தேன். ஓய்வுபெறும் தருவாயில் எனக்கு மாதம் ரூ.65,000 சம்பளம். ஆரம்பத்திலிருந்தே வருமானம் மொத்தத்தையுமே தாராளமாகச் செலவு செய்தே பழகிவிட்டேன். எனக்கு ஒரே ஒரு மகள். கடன் வாங்கித்தான் படிக்க வைத்தேன். ஓய்வுபெற்றதும் எனக்கு பி.எஃப், கிராஜூவிட்டி என மொத்தம் ரூ.18 …

Continue reading »

May 06

நிம்மதி தரும் நிதித் திட்டம் -37 – சுகமான வாழ்க்கைக்கு சூப்பரான முதலீடுகள்!

‘‘என் பெயர் ஹரிகுமார். வயது 49. நான் ஒரு பொறியியல் பட்டதாரி. கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலைப் பார்க்கிறேன். என் மனைவிக்கு வயது 47. தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்று கிறார். என் மகன் ராமகிருஷ்ணனுக்கு 15 வயது. இந்த வருடம் பத்தாம் வகுப்பு போக உள்ளான். குடும்பத்துடன் நாங்கள் சொந்த வீட்டில் வசித்து வருகிறோம். என் அம்மாவுக்கு வயது 69. சொந்த ஊரில், சொந்த வீட்டில் வசிக்கிறார். எனது மாத வருமானம் ரூ.1,15,000. …

Continue reading »

Apr 29

நிம்மதி தரும் நிதித் திட்டம் -36 – வீடு… கார்… மனைவி… மக்கள்… இளைஞர்களின் கனவு கைகூடுமா?

நாற்பது வயதில் குடும்ப நிதித் திட்டமிடல் குறித்து யோசிக்கத் தொடங்கியது பழைய தலைமுறை. அந்த வயதிலாவது அப்படியொரு எண்ணம் வந்தது பாசிட்டிவான வளர்ச்சி என்றாலும், அந்த வயதில் குடும்ப நிதித் திட்டமிடல் செய்து, அதை நடைமுறைப்படுத்துவதன் மூலம், குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளை முழுமையாக நிறைவேற்றிக்கொள்ள முடியாது. குடும்ப நிதித் திட்டமிடலைச் செய்து, 25 வயதிலேயே அதை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட வேண்டும். இதை இந்தக் காலத்து இளைஞர்களில் பலர் நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவர்தான் மதுரையைச் சேர்ந்த …

Continue reading »

Apr 22

நிம்மதி தரும் நிதித் திட்டம் – 35 – 38 வயதில் ஓய்வுபெறுவது சாத்தியமா?

‘‘நான் பிசினஸ் தொடங்கப் போகிறேன். இதற்கான முதலீட்டைச் சேர்க்க என்ன வழி..?” எனக் கேட்பவர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தன் குழந்தைகள் பிசினஸ் ஆரம்பிக்கத் தேவையான பணத்தைச் சேர்க்க என்ன வழி என்று கேட்டு, நாணயம் விகடனுக்கு மெயில் அனுப்பியிருந்தார் தங்கராஜ். வித்தியாசமான அவரின் கேள்வியைப் படித்து அவருடன் தொடர்புகொண்டோம். “என் வயது 36. கும்பகோணத்தைச் சார்ந்தவன். எனக்குத் திருமணமாகி 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். 5-ம் வகுப்பு படிக்கிறான். இன்னும் மூன்று மாதத்தில் எனக்கு …

Continue reading »

Apr 08

நிம்மதி தரும் நிதித் திட்டம் – 34 – செட்டில்மென்ட் தொகையை எப்படி முதலீடு செய்வது?

“என் பெயர் ஜாபர் பாட்ஷா. வயது 42. நான் மதுரையைச் சார்ந்தவன். பி.காம் படித்துள்ளேன். என் மனைவி வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கிறார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். மகளுக்கு 12 வயது. 7-ம் வகுப்பு படிக்கிறாள். மகனுக்கு ஐந்து வயது; முதல் வகுப்புப் படிக்கிறான்.   நான் கத்தாரில் உள்ள நிறுவனம் ஒன்றில் அக்கவுன்டன்டாகப் பணிபுரிந்து வருகிறேன். நான் பணிபுரியும் நிறுவனத்தை, 2018-ம் ஆண்டின் இறுதியில் மூடவுள்ளதாக அறிவித்துள்ளார்கள். எனவே, எனக்கு செட்டில்மென்ட் தொகையாக ரூ.30 லட்சம் கிடைக்கக்கூடும். …

Continue reading »

Apr 01

நிம்மதி தரும் நிதித் திட்டம் – 33 – எந்த இலக்கு முதலில்..?

இந்தக் காலத்து இளைஞர்கள் சம்பாதிக்க ஆரம்பிக்கும்போதே எதிர்கால இலக்குகளுக்குத் திட்டமிடத் தொடங்கிவிடுவது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், எந்த இலக்கு முதலில், எந்த இலக்கு இரண்டாவது என்று சரியாக வரிசைப்படுத்துவதில் கொஞ்சம் யோசிக்கத் தவறிவிடு கிறார்கள். துபாயில் பணியாற்றிவரும் சுதாகர், சம்பாதிக்கத் தொடங்கிய காலத்திலேயே முதலீடு செய்யத் தொடங்கியிருப்பதுடன், தனக்கான நிதித் திட்டமிடல் கேட்டு நம்மை அணுகியிருக்கிறார். சுதாகர் நம்மிடம் பேசும்போது… “நான் விகடன் இதழ்களை பல ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் படித்துவருகிறேன். நிதிச் சார்ந்த விழிப்பு உணர்வை …

Continue reading »

Mar 25

நிம்மதி தரும் நிதித் திட்டம் – 32 – வளமான எதிர்காலத்துக்குச் சரியான முதலீட்டுத் திட்டங்கள்!

சமீப காலமாக, குடும்ப நிதித் திட்டமிடலைச் செய்வதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார் கள் என்பதை, ‘நிதித் திட்டமிடல் வேண்டும்’ என்று கேட்டு வருபவர்களைக்கொண்டே அறிய முடிகிறது. அந்த வரிசையில் கவிதா இன்னொரு உதாரணம். அவர் நம்மிடம் பேசும்போது… “எனக்கு வயது 45. நான் நிதி சார்ந்த பொதுத் துறை நிறுவனமொன்றில் பணிபுரிகிறேன். என் கணவர் நிதித் துறையில் பிசினஸ் செய்கிறார். அவருக்கு மாதம் இவ்வளவு வருமானம் எனச் சொல்ல முடியாது. ஆண்டுக்குத் தோராயமாக ரூ.2.5 லட்சம் …

Continue reading »

Mar 19

நிம்மதி தரும் நிதித் திட்டம் – 31 – இன்ஷூரன்ஸை நிறுத்திவிட்டு, எஸ்.ஐ.பி தொடங்கலாமா?

ஓவியம்: பாரதிராஜா சிலர் கொஞ்சமாக சம்பாதித்தாலும், அதில் ஒரு பகுதியை நிச்சயம் முதலீடு செய்வார்கள். அந்தச் சிலரில் தருமபுரியைச் சேர்ந்த அண்ணாமலையும் ஒருவர். தனக்குத் தெரிந்த விஷயங்களின் அடிப்படையில் முதலீட்டு முயற்சிகளை எடுத்துவந்த அவர்,  தன்னைப் பற்றி நம்மிடம் சொன்னதாவது… “எனக்கு வயது 32. என் சொந்த ஊர் தருமபுரி அருகேயுள்ள கிராமம். என் மனைவிக்கு வயது 25. தற்போது வீட்டுப் பொறுப்பைக் கவனித்துக்கொள்கிறார். நான் 2012 முதல் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். நாணயம் …

Continue reading »

Feb 05

நிம்மதி தரும் நிதித் திட்டம் – 27 – பாசக்கார அண்ணனின் பக்கா பிளானிங்!

ஓவியம்: பாரதிராஜா கூட்டுக்குடும்பத்தில் வசிக்கும் சிலர், தன் மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு மட்டுமே திட்டமிடுவார்கள். ஆனால், தன் சகோதரர்களுக்கும் சேர்த்து முதலீட்டுத் திட்டத்தைச் சொல்லுங்கள் எனத் தூத்துக் குடியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், பாசக்கார அண்ணனாக நம்மைத் தேடிவந்தது கொஞ்சம் நெகிழ்ச்சியான விஷயம். பாலசுப்ரமணியன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். “என் வயது 33. எனக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. எனக்கு இப்போது நான்கு மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. நான் சென்னையில் ஐ.டி …

Continue reading »

Jan 30

நிம்மதி தரும் நிதித் திட்டம் – 26 – இ.எம்.ஐ-யில் பொருள்கள்… எதிர்கால இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி தன் வருமானத்துக்குக் கடன் எவ்வளவு வாங்கலாம், எவ்வளவு வாங்கினால் நெருக்கடியில் சிக்காமல் வாழமுடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அகலக்கால் வைத்துவிட்டு, பிறகு எதிர்காலத்துக்குச் சேர்க்க முடியாமல் நிறைய பேர் தவிக்கிறார்கள். அவர்களில் துரைசங்கரும் ஒருவர். துரைசங்கர் என்ன சொல்கிறார்…   “எனக்குச் சொந்த ஊர் மதுரை. தற்போது சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் அக்கவுன்ட்ஸ் பிரிவில் பணியாற்றி வருகிறேன். மாதம் 43,000 சம்பளம் வாங்குகிறேன். என் வயது 35. என் மனைவி பட்டப்படிப்பு …

Continue reading »

Older posts «