Category Archive: Tamil media

Jul 17

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 5 – பயமுறுத்தும் பர்சனல் லோன்!

ஓவியம்: ராஜேந்திரன் பெரும்பாலானவர்கள் ஏதாவது அவசரம், சிக்கல் என்றால் பதற்றமாகிவிடுவார்கள். நிதானமாக யோசிக்கத் தவறிவிடுவதால்,  சிக்கலை மேலும் அதிகப்படுத்திக்கொள்வார்கள். அதுவும் பணச் சிக்கல் என்றால் சொல்லவே வேண்டியதில்லை; அப்போதைய தேவைக்கு எப்படியாவது பணம் கிடைத்தால்போதும் என்று நினைத்துக் கடனை வாங்கிவிடுகிறார்கள். பிற்பாடு அந்தக் கடனைத் திரும்பக் கட்டமுடியாமல் மாட்டிக்கொள்கிறார்கள்.  கொஞ்சம் நிதானமாகச் செயல்பட்டால் குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கும் வாய்ப்பை எல்லோராலும் கண்டுபிடித்துப்  பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், அதுமாதிரியான வாய்ப்புகளைத் தவறவிட்டு, அதிக வட்டிக்குக் கடன் வாங்கி …

Continue reading »

Jul 09

கடன்… கஷ்டம்… தீர்வுகள்!- 4 – கடன் வாங்கி முதலீடு செய்தால் சிக்கல் வருமா?

கடன் வாங்காமல் இருக்க சிக்கனமாக செலவு செய்வதுதான் சரி. சிக்கனம் சேமிப்புக்கு வழிவகுக்கும். சேமிப்பு முதலீட்டுக்குக் கொண்டு செல்லும். சேமித்த பணத்தில் உடனடியாகத் தேவைப்படாத பணத்தைத்தான் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், பலரும் முதலீடு செய்வதற்காகவே கடன் வாங்குகிறார்கள்.     கடன் வாங்கி முதலீடு செய்யும்பட்சத்தில், அந்த முதலீடு அடையும் லாப வளர்ச்சி, கடனைச் செலுத்தி முடிக்கும் தகுதியை  அலசி ஆராய்ந்து அதன்பின் அந்த முடிவினை எடுத்தால், பெரிய சிக்கல் எதுவும் வர வாய்ப்பில்லை. ஆனால், …

Continue reading »

Jul 02

கடன்… கஷ்டம்… தீர்வுகள்!- 3 – கடன் வலையிலிருந்து தப்பிக்க என்ன வழி?

ஓவியம்: பாரதிராஜா கடன் வாங்கும்முன், அந்தக் கடனை வாங்குவதால் நமக்குக் கிடைக்கும் லாபம் என்ன, அந்தக் கடனை நம்மால் சரியாகத் திரும்பச் செலுத்த முடியுமா, அதற்கான வருமானம் நமக்குள்ளதா என்றெல்லாம் நம்மில் பலரும் யோசிப்பதில்லை. அவசரத் தேவைக்குக் கடன்  வாங்கும்போது, இதுமாதிரியெல்லாம் ஆழமாக யோசிக்க முடியாது. ஆனால், பிசினஸ் வளர்ச்சிக்காகக் கடன் வாங்கும்போது, அதிலுள்ள பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அம்சங்கள் குறித்து ஆராய்வது அவசியம். அப்படி யோசிக்காமல் வாங்கிய கடனால், இன்றைக்கு சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறார் …

Continue reading »

Jun 27

கடன்… கஷ்டம்… தீர்வுகள்!- 2 – கடனில் மூழ்கவைத்த கம்பெனி!

சிலர் எவ்வளவு கஷ்டம் வந்தாலும்  சமாளிப்பார்கள். இன்னும் சிலர், சின்னதாக ஒரு தோல்வி வந்தால்கூட, உலகமே சூனியமாகிவிட்டது போலத் துவண்டுபோவார்கள். திருச்சியைச் சேர்ந்த சந்திரசேகர் இதில் எந்த வகை என அவர் பேசுவதில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். “எனக்கு வயது 34. பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். 2015-ல் நான் வேலையை விட்டு நிற்கும்போது ரூ.56 ஆயிரம் சம்பளம் வாங்கி னேன். என் மனைவியும் பி.இ மெக்கானிக்கல் படித்தவர்தான். பணிக்குச் செல்லவில்லை. …

Continue reading »

Jun 20

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – ஃபைனான்ஷியல் தொடர் – 1

நிம்மதியைப் பறித்த சொந்த வீடு! கடன் வாங்காமல் வாழ்க்கை இல்லை. ஆனால், அந்தக் கடன் நம் வளர்ச்சிக்கு உதவுமா அல்லது வாழ்க்கையின் ஒட்டுமொத்த நிம்மதியைப் பறித்துவிடுமா என்பதைக் கடன் வாங்கும்முன் யோசித்தால், கடன் வலையில் சிக்காமல் தப்பித்துவிட முடியும்.     ஆனால், பேராசை என்னும் பேய் பலரையும் அப்படி யோசிக்க விடுவதில்லை கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள். இந்தச் சிக்கலின் சரியான முடிச்சைக் கண்டுபிடித்து விட்டால், எல்லாச் சிக்கல்களையும் அவிழ்த்துவிட முடியும். இதற்கான வழிமுறைகளைத் தெளிவாக …

Continue reading »

Jun 11

நிம்மதி தரும் நிதித் திட்டம் – 40 – கரைந்த சேமிப்பு… காத்திருக்கும் இலக்குகள்!

ஓவியம்: பாரதிராஜா “என் பெயர் செல்வக்குமார். சென்னையில் வசித்துவருகிறேன். வயது 47. ஆட்டோமொபைல் துறையில் 26 ஆண்டுகள் உயர்பதவியில் இருந்துள்ளேன். 2016 முதல் சொந்தமாக ஆட்டோமொபைல் கன்சல்டன்சி ஒன்றை நடத்தி வருகிறேன். தற்போது எல்லாச் செலவுகளுக்கும் போக மாதம் ரூ.1.5 லட்சம் வருமானம் கிடைக்கிறது. அடுத்தடுத்த வருடங்களில் ஆண்டுக்கு 30% வருமானம் அதிகரிக்க வாய்ப்புண்டு.   என் மனைவி வீட்டில் ஹிந்தி டியூஷன் எடுப்பதன் மூலம் மாதம் ரூ.4,000 வருமானம் வருகிறது. இதில்லாமல் கன்ஸ்யூமர் பொருள்கள் மார்க்கெட்டிங் …

Continue reading »

May 29

நிம்மதி தரும் நிதித் திட்டம் – 38 – சின்ன வயசு… பெரிய கனவு! – ரூ.1 கோடி

லட்சங்களில் சம்பாதிக்கும் இளைஞர்கள், கார் வாங்க வேண்டும், ஃப்ளாட் வாங்க வேண்டும், வெளிநாடுகள் செல்ல வேண்டும் என்று கனவு காண்பது பெரிய விஷயமில்லை. “வெறும் பத்தாயிரம்தான் சம்பளம் வாங்குகிறேன். ஆனாலும், நான் என்  45 வயதுக்குள் ரூ.1 கோடி சேர்க்க வேண்டும்” என ஒரு இளைஞர் கனவு காண்கிறார் என்றால் கொஞ்சம் ஆச்சர்யமான விஷயம்தான். அவருடைய கனவு கைகூட வாய்ப்பு உண்டா என்பதைப் பார்க்கும்முன் அவரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். “என் பெயர் வெங்கட். வயது 25. …

Continue reading »

May 13

உங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்! – எளிதாக அடையும் வழி

சிறிய உணவகம் ஒன்றில் மாதம் ரூ.15,000 சம்பளத்துக்கு சூப்பர்வைசராகப் பணியாற்றி வரும் கோவையைச் சேர்ந்த சந்திரமோகனுக்கு 62 வயது. கவலையுடன் அவர் தன் கடந்த காலத்தைப் பகிர்ந்துகொண்டார். “நான் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்தேன். ஓய்வுபெறும் தருவாயில் எனக்கு மாதம் ரூ.65,000 சம்பளம். ஆரம்பத்திலிருந்தே வருமானம் மொத்தத்தையுமே தாராளமாகச் செலவு செய்தே பழகிவிட்டேன். எனக்கு ஒரே ஒரு மகள். கடன் வாங்கித்தான் படிக்க வைத்தேன். ஓய்வுபெற்றதும் எனக்கு பி.எஃப், கிராஜூவிட்டி என மொத்தம் ரூ.18 …

Continue reading »

May 06

நிம்மதி தரும் நிதித் திட்டம் -37 – சுகமான வாழ்க்கைக்கு சூப்பரான முதலீடுகள்!

‘‘என் பெயர் ஹரிகுமார். வயது 49. நான் ஒரு பொறியியல் பட்டதாரி. கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலைப் பார்க்கிறேன். என் மனைவிக்கு வயது 47. தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்று கிறார். என் மகன் ராமகிருஷ்ணனுக்கு 15 வயது. இந்த வருடம் பத்தாம் வகுப்பு போக உள்ளான். குடும்பத்துடன் நாங்கள் சொந்த வீட்டில் வசித்து வருகிறோம். என் அம்மாவுக்கு வயது 69. சொந்த ஊரில், சொந்த வீட்டில் வசிக்கிறார். எனது மாத வருமானம் ரூ.1,15,000. …

Continue reading »

Apr 29

நிம்மதி தரும் நிதித் திட்டம் -36 – வீடு… கார்… மனைவி… மக்கள்… இளைஞர்களின் கனவு கைகூடுமா?

நாற்பது வயதில் குடும்ப நிதித் திட்டமிடல் குறித்து யோசிக்கத் தொடங்கியது பழைய தலைமுறை. அந்த வயதிலாவது அப்படியொரு எண்ணம் வந்தது பாசிட்டிவான வளர்ச்சி என்றாலும், அந்த வயதில் குடும்ப நிதித் திட்டமிடல் செய்து, அதை நடைமுறைப்படுத்துவதன் மூலம், குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளை முழுமையாக நிறைவேற்றிக்கொள்ள முடியாது. குடும்ப நிதித் திட்டமிடலைச் செய்து, 25 வயதிலேயே அதை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட வேண்டும். இதை இந்தக் காலத்து இளைஞர்களில் பலர் நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவர்தான் மதுரையைச் சேர்ந்த …

Continue reading »

Older posts «