Latest Posts

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 8 – சின்னச் சின்ன தவறுகள்… சிக்கலை அவிழ்க்கும் தீர்வுகள்!

நிறைய இளைஞர்கள் மிகச் சிறிய வயதிலேயே பண நிர்வாகத்தில் பட்டையைக் கிளப்புகிறார்கள். ஆனாலும், அவர்கள் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்துகொண்டால், எதிர்காலத்தில் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் வாழ முடியும். சென்னையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் தன் பிரச்னையைச் சொல்கிறார்…. ‘‘என் பெயர் தர்மராஜ். வயது 27. எனக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமம்….
Read more

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 7 – கைவிட்ட மகன்… கவலை தரும் கடன்!

ஓவியம்: ராஜேந்திரன் நிறையப் பேருக்கு வாழ்க்கையில் எந்தவிதமான திட்டமும் இருப்பதில்லை. மனதுக்குச் சரியென்று பட்டதையெல்லாம் செய்துகொண்டிருப்பார்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும், எல்லாவற்றையும் செலவு செய்துவிடுவார்கள். எதிர்காலத்துக்கான மிக முக்கியமான இலக்குகளுக்குக்கூடத் திட்டமிடாமல் ஏனோதானோவென்று இருந்துவிடுவதால்தான் எதிர்பாராத நேரங்களில் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவர்தான் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகநாதன். அவர் என்ன சொல்கிறார் எனக்…
Read more

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 6 – கலங்க வைத்த சினிமா மோகம்!

சிலர் ஏன் கடன் வாங்குகிறோம், எதற்குக் கடன் வாங்குகிறோம் என்று யோசிக்காமல்,  கடனை வாங்கித் தள்ளுகிறார்கள். அப்படித்தான் நாமக்கல்லைச் சேர்ந்த சங்கரும் ஏகத்துக்குக் கடனை வாங்கிவிட்டு, இப்போது கலங்கி நிற்கிறார். மிகுந்த வருத்தத்துடன் அவர் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். “ஆசிரியர் பயிற்சியை 1992-ல் முடித்துவிட்டு, அப்பாவின் கோழிக்கடையை நான்…
Read more

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 5 – பயமுறுத்தும் பர்சனல் லோன்!

ஓவியம்: ராஜேந்திரன் பெரும்பாலானவர்கள் ஏதாவது அவசரம், சிக்கல் என்றால் பதற்றமாகிவிடுவார்கள். நிதானமாக யோசிக்கத் தவறிவிடுவதால்,  சிக்கலை மேலும் அதிகப்படுத்திக்கொள்வார்கள். அதுவும் பணச் சிக்கல் என்றால் சொல்லவே வேண்டியதில்லை; அப்போதைய தேவைக்கு எப்படியாவது பணம் கிடைத்தால்போதும் என்று நினைத்துக் கடனை வாங்கிவிடுகிறார்கள். பிற்பாடு அந்தக் கடனைத் திரும்பக் கட்டமுடியாமல் மாட்டிக்கொள்கிறார்கள்.  கொஞ்சம் நிதானமாகச் செயல்பட்டால் குறைந்த வட்டிக்குக்…
Read more

கடன்… கஷ்டம்… தீர்வுகள்!- 4 – கடன் வாங்கி முதலீடு செய்தால் சிக்கல் வருமா?

கடன் வாங்காமல் இருக்க சிக்கனமாக செலவு செய்வதுதான் சரி. சிக்கனம் சேமிப்புக்கு வழிவகுக்கும். சேமிப்பு முதலீட்டுக்குக் கொண்டு செல்லும். சேமித்த பணத்தில் உடனடியாகத் தேவைப்படாத பணத்தைத்தான் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், பலரும் முதலீடு செய்வதற்காகவே கடன் வாங்குகிறார்கள்.     கடன் வாங்கி முதலீடு செய்யும்பட்சத்தில், அந்த முதலீடு அடையும் லாப வளர்ச்சி, கடனைச்…
Read more

கடன்… கஷ்டம்… தீர்வுகள்!- 3 – கடன் வலையிலிருந்து தப்பிக்க என்ன வழி?

ஓவியம்: பாரதிராஜா கடன் வாங்கும்முன், அந்தக் கடனை வாங்குவதால் நமக்குக் கிடைக்கும் லாபம் என்ன, அந்தக் கடனை நம்மால் சரியாகத் திரும்பச் செலுத்த முடியுமா, அதற்கான வருமானம் நமக்குள்ளதா என்றெல்லாம் நம்மில் பலரும் யோசிப்பதில்லை. அவசரத் தேவைக்குக் கடன்  வாங்கும்போது, இதுமாதிரியெல்லாம் ஆழமாக யோசிக்க முடியாது. ஆனால், பிசினஸ் வளர்ச்சிக்காகக் கடன் வாங்கும்போது, அதிலுள்ள பாசிட்டிவ்…
Read more

கடன்… கஷ்டம்… தீர்வுகள்!- 2 – கடனில் மூழ்கவைத்த கம்பெனி!

சிலர் எவ்வளவு கஷ்டம் வந்தாலும்  சமாளிப்பார்கள். இன்னும் சிலர், சின்னதாக ஒரு தோல்வி வந்தால்கூட, உலகமே சூனியமாகிவிட்டது போலத் துவண்டுபோவார்கள். திருச்சியைச் சேர்ந்த சந்திரசேகர் இதில் எந்த வகை என அவர் பேசுவதில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். “எனக்கு வயது 34. பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். 2015-ல் நான்…
Read more

கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – ஃபைனான்ஷியல் தொடர் – 1

நிம்மதியைப் பறித்த சொந்த வீடு! கடன் வாங்காமல் வாழ்க்கை இல்லை. ஆனால், அந்தக் கடன் நம் வளர்ச்சிக்கு உதவுமா அல்லது வாழ்க்கையின் ஒட்டுமொத்த நிம்மதியைப் பறித்துவிடுமா என்பதைக் கடன் வாங்கும்முன் யோசித்தால், கடன் வலையில் சிக்காமல் தப்பித்துவிட முடியும்.     ஆனால், பேராசை என்னும் பேய் பலரையும் அப்படி யோசிக்க விடுவதில்லை கடன் சிக்கலில்…
Read more

நிம்மதி தரும் நிதித் திட்டம் – 40 – கரைந்த சேமிப்பு… காத்திருக்கும் இலக்குகள்!

ஓவியம்: பாரதிராஜா “என் பெயர் செல்வக்குமார். சென்னையில் வசித்துவருகிறேன். வயது 47. ஆட்டோமொபைல் துறையில் 26 ஆண்டுகள் உயர்பதவியில் இருந்துள்ளேன். 2016 முதல் சொந்தமாக ஆட்டோமொபைல் கன்சல்டன்சி ஒன்றை நடத்தி வருகிறேன். தற்போது எல்லாச் செலவுகளுக்கும் போக மாதம் ரூ.1.5 லட்சம் வருமானம் கிடைக்கிறது. அடுத்தடுத்த வருடங்களில் ஆண்டுக்கு 30% வருமானம் அதிகரிக்க வாய்ப்புண்டு.  …
Read more