ஓய்வுக்காலத்துக்கு மிக அருகில் இருப்பதால் உங்கள் முதலீடு லார்ஜ்கேப் மற்றும் மல்டிகேப்பில் இருப்பது நன்று!
எனக்கு வயது 52. மாதந்தோறும் தலா ரூ.5,000 வீதம் எஸ்.ஐ.பி முறையில் என் ஓய்வுக்காலத்துக்காக பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விக்டி ஃபண்ட், ஆக்ஸிஸ் ஃபோகஸ்டு 25 ஃபண்ட், மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட், மோதிலால் ஆஸ்வால் மல்டிகேப் 35 ஃபண்ட், பிரின்சிபல் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட், கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட், கனரா ராபிகோ எமெர்ஜிங் மல்டிகேப் ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன். இவற்றில் மாற்றங்கள் ஏதாவது செய்ய வேண்டுமா?
– கிருஷ்ணகுமார், மெயில் மூலமாக
“பிர்லா சன்லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்டின் செயல்பாடு கடந்த சில ஆண்டுகளாக திருப்திகரமாக இல்லை. எனவே, அதை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக கனரா ராபிகோ ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யவும். இன்றைய சூழ்நிலையில் மல்டிகேப், லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் ஃபண்டுகளுக்கிடையே பெரிய மாற்றம் ஏதுமில்லை. உங்களுடைய போர்ட்ஃபோலியோவில் உள்ள மற்ற ஐந்து ஃபண்டுகளும் ஒரேவிதமான செயல்பாட்டில் இருப்பதால், வருமானத்தில் பெரிய மாறுதல் ஏதும் இருக்காது. மிரே எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் மற்றும் கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்யவும். மற்ற மூன்று ஃபண்டுகளை நிறுத்திவிட்டு, அவற்றுக்கு பதிலாக ஆக்ஸிஸ் மிட்கேப் மற்றும் எடெல்வைஸ் மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யவும். உங்களுக்கு 52 வயது, அதற்கேற்ற பலன் தரும் மோதிலால் ஆஸ்வால் டைனமிக் ஃபண்டில் முதலீடு செய்யவும்.”
நான் மாதம் ரூ.13,000 மட்டுமே வருமானம் பெறுகிறேன். நான் இப்போது மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் மாதம் ரூ.500 எஸ்.பி.ஐ ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்டில் முதலீடு செய்துவருகிறேன். இதை எத்தனை ஆண்டுகள் தொடர்ந்தால் நல்ல லாபம் கிடைக்கும், வேறு எந்த வகை ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?
– மகேஷ் குமார்.தி, மெயில் மூலமாக
“உங்களுக்கு இன்னும் ரூ.3,000 முதலீடு செய்வதற்கு வாய்ப்பிருந்தால் கனரா ராபிகோ ஈக்விட்டி ஃபண்ட், ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், கோட்டக் எமெர்ஜிங் பிசினஸஸ் ஈக்விட்டி ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் தலா ரூ.1,000 முதலீடு செய்யவும். இப்போது செய்யும் முதலீட்டைத் தொடரவும்.”
கடந்த 36 மாதங்களாக தலா ரூ.2,000 வீதம் ஐ.சி.ஐ.சி.ஐ மிட்கேப் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி மல்டிகேப் ஃபண்ட், ஐ.டி.எஃப்.சி மல்டிகேப் ஃபண்ட், சுந்தரம் மிட்கேப் ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன். நான் என் முதலீடுகளைத் தொடரலாமா அல்லது நிறுத்தவேண்டுமா? இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு என்னால் முதலீட்டைத் தொடர முடியும்.
– கணேஷ் ஹரிகோவிந்தன், மெயில் மூலமாக
“உங்கள் முதலீட்டில் மூன்று ஃபண்டுகளை நீங்கள் நிறுத்த வேண்டும். ஏனென்றால், அவற்றின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. ஐ.சி.ஐ.சி.ஐ மிட்கேப் ஃபண்டுக்கு பதிலாக, ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். கடந்த ஆறு மாதங்களில் ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஃபண்டின் செயல்பாடு சரியாக இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது. வரும் காலங்களில் அதன் செயல்பாட்டில் அதிக முன்னேற்றம் அடைய வாய்ப்பு குறைவு. எனவே, அதை நிறுத்திவிட்டு மோதிலால் ஆஸ்வால் டைனமிக் ஃபண்டில் முதலீடு செய்யவும். அதேபோல், ஐ.டி.எஃப்.சி மல்டிகேப் ஃபண்டின் செயல்பாடு சீராக இல்லை. சில ஆண்டுகள் நன்றாக இருந்தது; பிறகு நிறைய தடுமாற்றம் இருக்கிறது. எனவே, அதை நிறுத்தி விட்டு, கனரா ராபிகோ எமெர்ஜிங் ஃபண்டில் முதலீடு செய்யவும். சுந்தரம் மிட்கேப் ஃபண்டின் செயல்பாடும் மிதமாகவே உள்ளது. இருப்பினும், அதிலுள்ள பங்குகள் பொருளாதாரச் சூழல் மாறும்போது அதிக வருமானம் கொடுக்க வாய்ப்புள்ளது. எனவே, அதைத் தொடரவும்.”
என் வயது 42. ஐந்து ஆண்டுகளாக எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். என் முதலீடுகள்… மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ரூ.5,000, யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் ரூ.3,000, எல் அண்ட் டி ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் ரூ.2,000, ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட் ரூ.1,000, ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,000, பி.என்.பி பரிபா லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,000. என் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் மாற்றம் அவசியமா?
– ஏ.அழகப்பன், மெயில் மூலமாக
“உங்கள் முதலீட்டில் இரண்டு மாற்றங்களைப் பரிந்துரை செய்கிறேன். முதலாவது, எல் அண்ட் டி ஹைபிரிட் ஈக்விக்டி ஃபண்டை நிறுத்தி விடவும். அதற்கு பதிலாக, எஸ்.பி.ஐ ஹைபிரிட் ஃபண்டில் முதலீடு செய்யவும். அதேபோல் ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்டையும் நிறுத்திவிடவும். அதற்கு பதிலாக, ஐ.டி.எஃப்.சி எமெர்ஜிங் பிசினஸ் ஃபண்டில் முதலீடு செய்யவும். ஏனென்றால், இந்த ஃபண்டில் சுமார் 40% கேஷ் உள்ளது. இது மார்க்கெட் சூழ்நிலை மாறும்போது அதிக வருமானம் கொடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். மீதமுள்ள ஃபண்டுகளை அப்படியே தொடரலாம்.”
நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்கிறேன். என் முதலீடுகள்… ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட் ரூ.1,000, ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ் ஷீல்டு ஃபண்ட் ரூ.1,000, ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மால் கம்பெனீஸ் ஃபண்ட் ரூ.2,000, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.1,000. என் முதலீடுகளில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமா… மேலும், கூடுதலாக ரூ.2,000 முதலீடு செய்யத் தயார்.
– கணேஷ்.ரா, சென்னை
“ஃப்ராங்க்ளினின் டெப்ட் ஃபண்டுகள் சிக்கலில் உள்ளன. ஈக்விட்டி ஃபண்டின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை.
எனவே, ஃப்ராங்க்ளின் ஃபண்டுகளில் முதலீட்டை நிறுத்திவிடுவோம். அதேபோல், ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஃபண்டை நிறுத்திவிடவும். நிறுத்தப்பட்ட ஃபண்டுகளுக்கு பதிலாக, கனரா ராபிகோ ஈக்விட்டி டாக்ஸ் சேவர் ஃபண்ட், ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட், கோட்டக் எமெர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யவும். கூடுதலாக ரூ.2,000 முதலீடு செய்ய ஆக்ஸிஸ் ஃபோகஸ்டு 25 ஃபண்டில் போடவும்.’’
என் வயது 57. நான் எஸ்.ஐ.பி முறையில் 2009-ம் வருடத்திலிருந்து ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட், சுந்தரம் மிட்கேப் ஃபண்டுகளில் தலா ரூ.1,000 முதலீடு செய்து வருகிறேன். இன்னும் மூன்று வருடங்களுக்குத் தொடரலாம். இதற்கு ஆலோசனை தேவை.
– எஸ்.காசிநாதன், மெயில் மூலமாக
“ஓய்வுக்காலத்துக்கு மிக அருகில் இருப்பதால் உங்கள் முதலீடு லார்ஜ்கேப் மற்றும் மல்டி கேப்பில் இருப்பது மிகவும் நன்று.
ஏனென்றால் இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும்போது முதலில் லார்ஜ்கேப் மற்றும் மல்டிகேப் அதிகம் வருமானம் தர வாய்ப்புள்ளது. எனவே, அவற்றில் முதலீடு செய்துவந்தால் நல்லது. ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் மற்றும் சுந்தரம் மிட்கேப் ஃபண்டுகளை நிறுத்திவிடவும். அவற்றுக்கு பதிலாக, ஆக்ஸிஸ் புளூசிப் மற்றும் கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்டில் முதலீடு செய்யவும்.”
தொகுப்பு: கா.முத்துசூரியா
THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 17.05.2020 WRITTEN BY MR. SURESH PARTHASARATHY.