
ஃபண்ட் கிளினிக்
ஃபண்ட் ஆலோசனை
நான் கடந்த ஓராண்டாகப் பின்வரும் ஃபண்டுகளில் மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். எனக்கு 60 வயது. என் முதலீடுகள் சரியாக இருக்கின்றனவா என்பதைச் சொல்லவும்.
நான் முதலீடு செய்யும் ஃபண்டுகள்… ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மால் கம்பெனீஸ் ஃபண்ட் ரூ.5,000, எஸ்.பி.ஐ மேக்னம் மிட்கேப் ஃபண்ட் ரூ.2,500, ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட் லைன் ஃபண்ட் ரூ.2,500, டி.எஸ்.பி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,500, கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட் ரூ.2,500, ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் ரூ.2,500, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.2,500, சுந்தரம் செலக்ட் ஃபோகஸ் ஃபண்ட் ரூ.2,500, டாடா ஈக்விட்டி பி/இ ஃபண்ட் ரூ.2,500. நான் குறிப்பிட்ட இலக்குகள் எதையும் நிர்ணயித்து இந்த முதலீடுகளைச் செய்யவில்லை.
– ராஜன், சென்னை-32
“நீங்கள் ஓய்வுபெற்றுவிட்டதால், எந்தவித இலக்கும் இல்லாமல் முதலீடு செய்கிறீர்கள். ஓய்வுக்காலத்தில் நீங்கள் எடுக்க வேண்டிய ரிஸ்க்கைக் கருத்தில்கொண்டு உங்கள் போர்ட்ஃபோலியோவில் சில மாற்றங்களைச் சொல்கிறேன். உங்கள் முதலீட்டுத் தொகை 42% லார்ஜ்கேப்பிலும் 30% ஸ்மால்கேப்பிலும் உள்ளன. இதனால், பங்குச் சந்தை இறங்கும்போது ஸ்மால்கேப் முதலீடுகள் மூலம் உங்களுக்கு அதிக இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. ஒருவர் 60 வயதைக் கடந்தபின் 10 – 20 சதவிகிதத்துக்குமேல் ஸ்மால்கேப்பில் முதலீடு செய்வது சரியான அணுகுமுறையல்ல. கடந்த சில ஆண்டுகளாக ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் நல்ல வருமானம் தரவில்லை. எனவே, உங்கள் போர்ட்ஃபோலியோவை பின்வருமாறு மாற்றி அமைத்துக்கொள்ளவும்.
ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மால் கம்பெனீஸ் ஃபண்ட் முதலீட்டை ரூ.2,500-ஆகக் குறைத்துக் கொண்டு, மிரே அஸெட் ஃபோகஸ்டு ஃபண்டில் ரூ.2,500 முதலீடு செய்யவும். ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் முதலீட்டை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக எடெல்வைஸ் மல்டிகேப் ஃபண்டில் ரூ.2,500 முதலீடு செய்யவும்.”
முதலீட்டு முடிவை நிதி ஆலோசகருடன் கலந்து எடுக்காமல், நீங்களே எடுக்கும்பட்சத்தில் கூடுதல் கவனம் தேவை.
என் வயது 56. நான் ஒவ்வொரு ஃபண்டிலும் எஸ்.ஐ.பி முறையில் மாதம் தோறும் ரூ.5,000 வீதம் ஒன்பது ஃபண்டுகளில் ரூ.45,000-த்தை கடந்த மூன்று ஆண்டுகளாக முதலீடு செய்து வருகிறேன். பத்து ஆண்டுகளுக்கு நான் இந்த முதலீட்டைத் தொடர்ந்து செய்யத் திட்டமிட்டுள்ளேன்.
நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள்…. ஐ.சி.ஐ.சி.ஐ புளூசிப் ஃபண்ட், ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்ட், பராக் பரிக் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட், பிரின்சிபல் மல்டிகேப் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட், எல் அண்ட் டி இந்தியா வேல்யூ ஃபண்ட், நிப்பான் பார்மா ஃபண்ட். எனது முதலீட்டில் மாற்றம் செய்ய வேண்டுமா?
– எஸ்.சங்கர், மெயில் மூலமாக
“நீங்கள் முதலீடு செய்யும் மூன்று ஃபண்டுகளும் ஒரே தன்மையுடையவையாக இருக்கின்றன. கடந்த ஆண்டு லார்ஜ்கேப் நன்றாகச் செயல்படும் என்று நிறைய ஃபண்ட் மேனேஜர்கள் லார்ஜ்கேப்பை அவர்களுடைய மல்டிகேப் முதலீட்டில் அதிகப்படுத்தினார்கள். எனவே, மல்டிகேப்பில் அதிக அளவில் அதாவது, 70 – 80% வரை முதலீடு உள்ளது.
வரும் காலகட்டத்தில் மிட் அண்ட் ஸ்மால்கேப் அதிக வருமானம் தர வாய்ப்பு இருப்பதால், உங்கள் மல்டிகேப் முதலீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரின்சிபல் மல்டிகேப் ஃபண்டுக்கு பதிலாக, மிரே அஸெட் ஃபோகஸ்டு ஃபண்டில் முதலீடு செய்யவும்.
அதேபோல், ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டுக்கு பதிலாக மோதிலால் ஆஸ்வால் 30 ஃபண்டிலும், எல் அண்ட் டி வேல்யூ ஃபண்டுக்கு பதிலாக எடெல்வைஸ் மிட்கேப் ஃபண்டிலும் முதலீட்டை மாற்றிக் கொள்ளவும்.”
உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் உங்களுடைய ஓய்வுக்காலத்துக்காக முதலீடு செய்யும்போது மிகவும் கன்சர்வேட்டிவ்வான போர்ட்ஃபோலியோ தேவை இல்லை.
எனக்கு வயது 40. எனக்கு இரண்டு குழந்தைகள். மகனுக்கு 12 வயது, மகளுக்கு 5 வயது. நான் 60 வயதில் ஓய்வு பெறுவேன். குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணத்துக்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவருகிறேன்.
எனது முதலீடுகள்… மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.2,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,000, ஃப்ராங்க்ளின் இந்தியா ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் ரூ.3,500, நிப்பான் இந்தியா லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,000.
நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகளில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா?
– கே.ராஜாத்தி, விருதுநகர்
“நீங்கள் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் உங்களுடைய ஓய்வுக் காலத்துக்காக முதலீடு செய்கிறீர்கள். அப்படி இருக்கும்போது மிகவும் கன்சர்வேட்டிவ்வான போர்ட்ஃபோலியோ தேவை இல்லை. 40% மல்டிகேப்பிலும் 40% மிட்கேப் மற்றும் லார்ஜ்கேப்பிலும், 20% ஸ்மால்கேப்பிலும் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெற வாய்ப்புள்ளது. உங்களுடைய போர்ட்ஃபோலியோவில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃப்ராங்க்ளின் இந்தியா ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்டுக்கு பதிலாக எடெல்வைஸ் மிட்கேப் ஃபண்டில் முதலீட்டை மாற்றிக்கொள்ளவும்.”
என்னுடைய வயது 33. என் மகனுக்கு 4 வயது. மகளுக்கு 2 வயது. என் குழந்தைகளின் திருமணம் மற்றும் என்னுடைய ஓய்வுக் காலத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி-யில் மாதந்தோறும் 10 ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன். 2019-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஃபண்டிலும் ரூ.1,000 என ரூ.10,000 முதலீடு செய்கிறேன். என்னுடைய போர்ட்ஃபோலியோ அடுத்த 25 ஆண்டுகளில் எவ்வளவு வருமானம் தரும்… என் முதலீட்டில் மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டுமா?
என் முதலீடுகள்… ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட், மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட், மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட், கனரா ராபிகோ எமெர்ஜிங் ஈக்விட்டீஸ் ஃபண்ட், மிரே அஸெட் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட், கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட், கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட், ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட், ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட், எஸ்.பி.ஐ பேங்கிங் & ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஃபண்ட்.
– சுரேஷ் குமார், சென்னை-24
“பொதுவாக ஒரு போர்ட்ஃபோலியோ 12% வருமானம் கொடுப்பது நன்று. முதலீடு செய்திருக்கும் ஃபண்டுகளின் செயல்பாடு சரியில்லையென்றால், உடனே மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். முதலீட்டு முடிவை நிதி ஆலோசகருடன் கலந்து எடுக்காமல், நீங்களே எடுக்கும்பட்சத்தில் கூடுதல் கவனம் தேவை. ஆண்டுக்கு ஒருமுறை போர்ட்ஃபோலியோவை ரிவியூ செய்வது மிக அவசியம்.
உங்கள் போர்ட்ஃபோலியோவிலுள்ள கோட்டக் மல்டிகேப் ஃபண்டை நிறுத்திவிட்டு, அதன்மூலம் கிடைக்கும் தொகையை ஆக்ஸிஸ் மிட் கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யவும். மீதமுள்ள ஃபண்டுகளை அப்படியே தொடரவும்.”
தொகுப்பு: கா.முத்துசூரியா
This article was posted in Nanayam vikatan on Feb 9-written by Mr.Suresh Parthasarathy.