
மோகன் மார்டீன், முக நூல் மூலம்.
எனக்கு ரூ.80,000 தேவை. இதைத் தனிநபர் கடன் மூலம் வாங்கலாமா அல்லது தங்க நகைக்கடன் மூலம் வாங்கலாமா, எது லாபகரமாக இருக்கும்?
சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், Myassetsconsolidation.com
“தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது 9.6 சதவிகிதத்திலிருந்து அதிகபட்சமாக 24% வரை உள்ளது. நீங்கள் பெரிய நிறுவனத்தில் வேலை செய்யும்பட்சத்தில் குறைவான வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இல்லையெனில், அதிக வட்டி செலுத்த நேரிடும். ஆகையால், நீங்கள் நகைக் கடன் வாங்குவது சிறந்தது. அத்துடன் உங்களுடைய தேவை ரூ.80,000 என்பதால், பெரிய அளவில் வட்டி விகிதம் மாற்றம் இல்லை.
கடனைத் திரும்பக் கட்டும்போது அசலின் ஒரு பகுதியையும் திருப்பிச் செலுத்துமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் விரைவாகக் கடனை அடைக்க இயலும். வெறும் வட்டி மட்டும் செலுத்தி வந்தால் அசல் அப்படியே தங்கிவிடும்.”
THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 25.09.2021 WRITTEN BY MR.SURESH PARTHASARATHY