
லோகேஸ்வரி, கொருக்குப்பேட்டை, சென்னை.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமான எதிர்பார்ப்பாகப் பெரும்பாலான நிதி ஆலோசகர்கள் ஆண்டுக்கு 12 சதவிகிதத்தைக் குறிப்பிடுகிறார்கள். இப்படி 12% எனக் குறிப்பிட ஏதாவது பிரத்யேக காரணம் இருக்கிறதா?
சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், Myassetsconsolidation.com
“முதலீட்டு ஆலோசகர்கள் நீண்ட காலத்தில் பங்குச் சந்தை மூலம் 12% வருமானம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) மற்றும் பணவீக்க விகிதம் இரண்டையும் கூட்டினால், பல சமயங்களில் 12% வரும். இதன் அடிப்படையில் தான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் 12% வருமானம் கிடைக்கும் என்கிறார்கள்.
1980–ம் ஆண்டில் இருந்து பார்த்தால், ஜி.டி.பி மற்றும் பணவீக்க விகிதம் ஆகிய இரண்டின் கூட்டுத்தொகை 12%-க்கு மேல் இருக்கும். அத்துடன் முதலீடு செய்யும் நிறுவனத்தைச் சார்ந்து கூடுதலாக 2 – 3% வருமானம் அதாவது, 14 – 15% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.”
THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 9.4.2022 WRITTEN BY MR.SURESH PARTHASARATHY.