
ஃபண்ட் கிளினிக்
ஓய்வுக்கால முதலீடுகள் நீண்டகால அடிப்படையில் இருந்தால்தான் வருமான இலக்கை அடைய முடியும்!
என் வயது 36. என் மாதாந்தர வருமானத்தில் மாதம் ரூ.10,000 வீதம் ஃப்ராங்க்ளின் ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட், எல்.ஐ.சி லார்ஜ் & மிட்கேப் ஃபண்ட், எஸ்.பி.ஐ புளூசிப் ஃபண்ட், எஸ்.பி.ஐ ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட், சுந்தரம் மிட்கேப் ஃபண்ட் ஆகியவற்றில் 2018 ஏப்ரல் முதல் செலுத்தி வருகிறேன்.
மேலும், தலா ரூ.50,000 வீதம் ஒருமுறை முதலீடாக ஆக்ஸிஸ் ஃபோகஸ்டு 25 ஃபண்ட், ஃப்ராங்க்ளின் ஈக்விட்டி ஃபண்ட், ஃப்ராங்க்ளின் பிரைமா ஃபண்ட் எல்.ஐ.சி லார்ஜ்கேப் ஃபண்ட், எல்.ஐ.சி லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்ட் எஸ்.பி.ஐ புளூசிப் ஃபண்ட், சுந்தரம் மிட்கேப் ஃபண்ட் ஆகியவற்றில் 2018 நவம்பர் முதல் முதலீடு செய்துள்ளேன். அடுத்த 20 ஆண்டுகளில் என் முதலீட்டு வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதையும் மேற்படி முதலீடுகளில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
– குமரவேல், சேலம்
“உங்களுடைய ஒரு முறை, மாதாந்தர முதலீடுகளின் தற்போதைய மதிப்பு ரூ.19.70 லட்சம். இதே அளவில் பரிந்துரைத்துள்ள மியூச்சுவல் ஃபண்டுகளில் அடுத்த 20 ஆண்டுகள் முதலீடு செய்து அதன் ஆண்டு சராசரி வருமானம் 12% இருக்கும்பட்சத்தில் உங்கள் முதலீடுகளின் மதிப்பு 20 ஆண்டுகளில் ரூ.7.09 கோடியாக வளர வாய்ப்புள்ளது.
நீங்கள் சில இலக்குகளை அடையும் நோக்கத்தில் முதலீடுகள் செய்து வருகிறீர்கள் எனில், கடன் மற்றும் தங்கம் உள்ளிட்ட முதலீடுகளைச் சொத்து பரவலாக்கல் (Asset Allocation) முறையில் செய்தால், உங்கள் இலக்குகளை அடைய ஏதுவாக இருக்கும். இங்கே குறிப்பிட்டுள்ளபடி, மாற்றங்களை மட்டும் செய்துகொள்ளுங்கள். மற்ற ஃபண்டுகளை இப்போது உள்ளவாறே தொடரலாம்.
நீங்கள் செய்துவரும் மாதாந்தர முதலீடுகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள்: ஃப்ராங்க்ளின் ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட், எல்.ஐ.சி லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்ட், கனரா ராபிகோ புளூசிப் ஃபண்ட், எஸ்.பி.ஐ ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட், டி.எஸ்.பி மிட்கேப் ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் தலா ரூ.10,000 எஸ்.ஐ.பி முறையில் முதலீடு.
நீங்கள் செய்துள்ள ஒருமுறை முதலீடுகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள்: ஆக்ஸிஸ் ஃபோகஸ்டு 25 ஃபண்ட், யு.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட், மிரே அஸெட் மிட்கேப் ஃபண்ட், எல்.ஐ.சி லார்ஜ்கேப் ஃபண்ட், எல்.ஐ.சி லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்ட், ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், டி.எஸ்.பி மிட்கேப் ஃபண்ட் ஃபண்டுகளில் தலா ரூ.50,000 முதலீடு.”
கடந்த ஆறு மாதங்களாக மூன்று மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டைத் தொடங்கியுள்ளேன். இந்த முதலீட்டை எத்தனை ஆண்டுகள் தொடர்ந்தால், ரூ.1 கோடி இலக்கை எட்ட முடியும்?
என் முதலீடுகள்… ஆக்ஸிஸ் புளூசிப் ஃண்ட் ரூ5,000, ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.3,000, ஆக்ஸிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் ரூ.2,000.
– ஜவஹர், வேலூர்
“உங்கள் முதலீட்டின் தற்போதைய மதிப்பான 66,000 ரூபாயையும் சேர்த்து, எஸ்.ஐ.பி முதலீடான 10,000 ரூபாயைத் தொடர்ந்து செய்துவந்தால், ஆண்டு சராசரி வருமானம் 12% இருக்குமெனில், நீங்கள் 19.5 ஆண்டுகளில் ரூ.1 கோடி என்ற இலக்கை அடைய வாய்ப்புள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை உங்கள் முதலீடுகளை மறு ஆய்வு செய்து நீங்கள் நிர்ணயித்துள்ள இலக்கை அடையத் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்வது அவசியம்.’’
நாம் செப்டம்பர் 2019 முதல் மாதம்தோறும் தலா ரூ.20,000 வீதம் சில ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு முதலீட்டைத் தொடர உள்ளேன். நான் என் ஓய்வுக்கால கார்ப்பஸ் தொகையாக ரூ.2.5 கோடி சேர்க்க வேண்டும் என இலக்கைக் கொண்டுள்ளேன். என் முதலீடுகள் குறித்துத் தெளிவுபடுத்தவும்.
நான் செய்து வரும் முதலீடுகள்… ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்ட், ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், ஆக்ஸிஸ் குரோத் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட், ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட், கனரா ராபிகோ எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட், இன்வெஸ்கோ இந்தியா மல்ட்டிகேப் ஃபண்ட், மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட், மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட், பி.ஜி.ஐ.எம் மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்,பி.ஜி.எம் ஸ்மால்கேப் ஃபண்ட், எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட்.
– கணேஷ், மெயில் மூலமாக
“ஓய்வுக்காலத்துக்கான முதலீடுகள் நீண்டகால அடிப்படையில் இருந்தால்தான் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஈடு செய்து மேம்பட்ட வருமானம் பெற ஏதுவாக இருக்கும்.
உங்கள் போர்ட்ஃபோலியோவில் பி.ஜி.ஐ.எம் ஸ்மால்கேப் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படி ஒரு ஃபண்ட் இல்லை. எனவே, அதை மல்டிகேப் ஃபண்டாக எடுத்துக்கொண்டால், உங்கள் முதலீடுகளின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.34.40 லட்சம். இப்போது உள்ள எஸ்.ஐ.பி முதலீடு ரூ.2.40 லட்சத்துடன், மேலும் ரூ.80,000 எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவந்தால், போர்ட்ஃபோலியோ ஆண்டு சராசரி வருமானம் 12% இருக்குமெனில், உங்கள் இலக்கான ரூ.2.5 கோடியை நான்கு ஆண்டுகளில் அடைய வாய்ப்புள்ளது.
உங்கள் ஓய்வுக்காலத்துக்கு பணவீக்க விகிதத்தைக் கணக்கில் கொண்டு தேவையான தொகையைக் கணக்கிடவும். அதற்கேற்ப உங்கள் ஓய்வுக்கால முதலீட்டை அஸெட் அலொகேஷன் முறையில் முதலீடுகளைச் செய்யுங்கள்.”
என் வயது 57. நான் சில ஃபண்டுகளில் மாதம்தோறும் ரூ.5,000 வீதம் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். நான் செய்துவரும் முட்தலீடுகளில் மாற்றம் அவசியமா?
என் முதலீடுகள்… ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட், நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட், மோதிலால் ஆஸ்வால் மல்ட்டிகேப் 35 ஃபண்ட்.
இப்போது புதிதாக ரூ.10,000 மாதம்தோறும் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். அதற்கான பரிந்துரையையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
– சி.ரவிச்சந்திரன், ஈரோடு
“இப்போது உள்ள முதலீடுகளில் ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டை நிறுத்திவிட்டு, அதிகம் வருமானம் தர வாய்ப்புள்ள மிரே அஸெட் லார்ஜ்கேப் ஈக்விட்டி ஃபண்டில் முதலீட்டைத் தொடரவும்.
அதேபோல், மோதிலால் ஆஸ்வால் மல்ட்டிகேப் 35 ஃபண்டுக்கு பதில் யு.டி.ஐ ஈக்விட்டி ஃபண்டில் முதலீட்டைத் தொடரவும்.
புதிதாக நீங்கள் முதலீடு செய்ய திட்டமிள்ள 10,000 ரூபாயை இரண்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யவும். கோட்டக் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில் ரூ.5,000 மற்றும் இன்வெஸ்கோ மிட்கேப் ஃபண்டில் ரூ.5,000 என பிரித்து முதலீடு செய்யுங்கள்.”
உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா?
finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.
THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 17/10/2020 WRITTEN BY MR.SURESH PARTHASARATHY.