
ஃபண்ட் கிளினிக்
முதலீட்டு ஆலோசனை
எனக்கு வயது 47. நான் 2015-ம் ஆண்டு முதல் மாதந்தோறும் தலா ரூ.4,000 வீதம் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மிட்கேப் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. புளூசிப் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட் ஆகிய ஐந்து ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகளில் மாற்றம் செய்ய வேண்டுமா?
– வெங்கட், கோவை-2
“இறங்குமுகமாக இருக்கும் சந்தையை லாபகரமாக மாற்றிக்கொள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு ஒரு வாய்ப்பிருக்கிறது.
உங்களிடமிருக்கும் ஃபண்டுகளில் செக்டார் அலொகேஷன் எப்படி இருக்கிறது, எந்த செக்டார் இந்த இறக்கத்தில் அதிகம் பாதிப்படைந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து, முதலீட்டை மாற்றியமைத்தால், சந்தைச் சரிவால் இழந்தவற்றை ஈடுசெய்ய முடியும்.
உங்கள் போர்ட்ஃபோலியோவிலுள்ள ஆதித்ய பிர்லா சன் லைஃப் மிட்கேப் ஃபண்டின் செயல்பாடு கடந்த பல ஆண்டுகளாக திருப்திகரமாக இல்லை. இந்த மார்க்கெட் சரிவில் ஃபைனான்ஷியல் செக்டார் பாசிட்டிவ்வாக இருக்கிறது. ஆனால், இந்த ஃபண்டில் ஃபைனான்ஷியல் செக்டாரின் எக்ஸ்போஷர் குறைவாக உள்ளது. ஆகையால், இந்த ஃபண்டை நிறுத்திவிட்டு, இன்வெஸ்கோ மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். அதேபோல், ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட் ஃபைனான்ஷியல் செக்டாரில் அதிக எக்ஸ்போஷர் வைத்திருந்தாலும், அதன் செயல்பாடு சில ஆண்டுக்காலமாக திருப்திகரமாக இல்லாததால், அதை நிறுத்திவிட்டு ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்டில் முதலீடு செய்யவும். ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் பல ஆண்டுகளாக சுமாரான வருமானம் தந்திருந்தாலும், இந்த மார்க்கெட் இறக்கத்தில் அதன் செயல்பாடு மாற வாய்ப்பு உண்டு. எனவே, இந்த ஃபண்டின் செயல்பாட்டைக் கண்காணித்து முடிவு செய்யவும்.”
எனக்கு இரண்டு குழந்தைகள். என் மகன் 7-ம் வகுப்பு படித்துவருகிறான். மகள் முதல் வகுப்பு படிக்கிறாள். நான் என் குழந்தைகளுக்காக மொத்த முதலீடாக, பின்வரும் ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன். ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட் ரூ.3.5 லட்சம், ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட் ரூ.60,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மல்டி அஸெட் ஃபண்டில் ரூ.80,000.நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள் சரியானவையா?
– வி.சரவணகுமார், விருதுநகர்
“கடந்த சில ஆண்டுகளாக ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்டின் செயல்பாடு ஏமாற்றம் தருவதாகத்தான் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் சரியாகச் செயல்படவில்லையென்றால் விற்றுவிடுவதுதான் சரி. அதேபோல் ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்டையும் விற்றுவிடவும். இந்த இரண்டு ஃபண்டுகளுக்கும் பதிலாக மோதிலால் ஆஸ்வால் ஃபோகஸ்டு 25 ஃபண்ட், யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளில் முதலீடு செய்யவும்.
நீங்கள் குறைவான ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று நினைத்து, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மல்டி அஸெட் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால் அதைத் தொடரவும்.”
பத்து ஆண்டுக்கால இலக்கில் நான் சில மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் முதலீடு செய்துவருகிறேன். என் முதலீடுகள்… ஃப்ராங்க்ளின் ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட் ரூ.5,000, ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.5,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.12,000, கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட் ரூ.5,000. என் முதலீட்டில் ஏதாவது மாற்றம் செய்ய அவசியம் இருக்கிறதா?
– டேனீஸ், மெயில் மூலமாக
“உங்கள் ஃபண்ட் முதலீட்டில் லார்ஜ்கேப் முதலீடு இல்லாமல் இருக்கிறது. நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்யும்போது லார்ஜ்கேப், மல்டிகேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் எனப் பிரித்து முதலீடு செய்ய வேண்டியது அவசியம். உங்கள் போர்ட் ஃபோலியோவில் 37% ஸ்மால்கேப்பில் இருக்கிறது.
இப்படியிருக்கும் நிலையில், பங்குச் சந்தை இறங்கும்போது உங்கள் போர்ட் ஃபோலியோவில் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஃப்ராங்க்ளின் ஸ்மால்கேப் ஃபண்டுக்கு பதிலாக, எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் மற்றும் ஆக்ஸிஸ் ஃபோகஸ்டு 25 ஃபண்டுகளில் தலா ரூ.2,500 என முதலீட்டை மாற்றிக்கொள்ளவும்.
ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்டுக்கு பதிலாக, கனரா ராபிகோ ஈக்விட்டி டைவர்சிஃபைடு ஃபண்ட் மற்றும் எடெல்வைஸ் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் தலா ரூ.2,500 என முதலீட்டை மாற்றிக்கொள்ளவும்.”

நான் குடும்பத்தலைவி. எனக்கு இரண்டு குழந்தைகள். மகனுக்கு எட்டு வயது, மகளுக்கு ஆறு வயது. 2019 செப்டம்பர் முதல் மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். என் குழந்தைகளின் மேற்படிப்பு, திருமணத்துக்காக முதலீட்டை ஆரம்பித்துள்ளேன். என் முதலீடுகள் சரியானவையா என்று சொல்லவும்.
என் முதலீடுகள்… ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ரூ.3,000, கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட் ரூ.1,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் ரூ.2,000.
– மினிபிரியா, சிவகங்கை
“உங்கள் போர்ட்ஃபோலியோவிலுள்ள ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் மற்றும் ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்டுகளின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. அதேபோல் மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் கடந்த பல ஆண்டுகளாக நல்ல ஏற்றத்தைத் தந்திருக்கிறது. எனவே, உங்கள் போர்ட்ஃபோலியோவில் மாற்றம் எதுவும் தேவையில்லை. அப்படியே தொடரவும்.”
நான் நீண்டகால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். பத்து ஆண்டுக்கால இலக்கில் முதலீடு செய்துவரும் என் முதலீடுகள் சரியாக இருக்கின்றனவா?
என் முதலீடுகள்… ஹெச்.டி.எஃப்.சி ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,500, ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,500, டாடா மிட்கேப் ஃபண்ட் ரூ2,000, ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.2,500.
– கோபிநாத், மெயில் மூலமாக
“ஹெச்.டி.எஃப்.சி ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்டின் செயல்பாடு கடந்த சில ஆண்டுகளாகப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இது அதன் சொத்து மதிப்பு உயர்ந்ததால் இருக்குமோ என்ற சந்தேகமும் இருக்கிறது. எனவே, இந்த ஃபண்டில் செய்யும் முதலீட்டை நிறுத்திவிட்டு, எஸ்.பி.ஐ ஹைபிரிட் ஃபண்டில் முதலீடு செய்யவும். அதேபோல் ஹெச்.டிஎஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்டின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. இந்த ஃபண்டுக்கு பதிலாக எடெல்வைஸ் ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். மீதமுள்ள இரண்டு ஃபண்டுகளையும் அப்படியே தொடரவும்.”
தொகுப்பு: கா.முத்துசூரியா
This article was posted in Nanayam vikatan on 15/03/2020,written by Mr .Suresh Parthasarathy.