
கிரெடிட்கார்டுஎன்பதுகணக்கில்பணம்இல்லாமல்பொருள்களைவாங்குவதற்கானஓர்அட்டை. இதைத்தமிழில்கடன்அட்டைஎன்றுசொல்லலாம். நீங்கள்வாங்கியபொருளுக்கானபணத்தைகுறிப்பிட்டகாலத்துக்குள்அந்தகிரெடிட்கார்டுகம்பெனிக்குச்செலுத்தவேண்டும். அவ்வாறுசெலுத்தவில்லைஎனில், அதுகடனாகஏற்கப்பட்டுஅதற்கானவட்டியுடன்திரும்பச்செலுத்தவேண்டும். கிரெடிட்கார்டுகுறித்துபலரும்அடிக்கடிகேட்கும்கேள்விகளும்அதற்கானபதில்களும்இனி…
சுரேஷ்பார்த்தசாரதிநிதிஆலோசகர், Myassets consolidation.com
கிரெடிட்கார்டுக்கும்டெபிட்கார்டுக்கும்என்னவித்தியாசம்?
“கணக்கில்பணம்இல்லாமல்செலவுசெய்வதற்குகிரெடிட்கார்டுஉதவும். டெபிட்கார்ட், உங்கள்சேவிங்ஸ்அக்கவுன்டில்இருக்கும்பணத்தைஎடுக்க, அதன்மூலம்பொருள்களைவாங்கப்பயன்படும்.”
எதன்அடிப்படையில்கிரெடிட்கார்டு்கொடுக்கப்படுகிறது?
“ஒருவருடையவருமானத்தின்அடிப்படையில், கிரெடிட்கார்டுகொடுக்கப்படுகிறது. அத்துடன்உங்கள்வாடிக்கையாளரைஅறிந்துகொள்ளுங்கள் (கே.ஒய்.சி) என்றவிவரத்தில்அடிப்படையில்கடன்அட்டைவழங்குவதுமுடிவுசெய்யப்படுகிறது. சிலருக்குஅதிகவருமானம்இருக்கும். ஆனால், அவர்களின்பணிஸ்திரத்தன்மைஇல்லாமல்இருந்தால்அவர்களுக்குகிரெடிட்கார்டுகிடைப்பதுகடினம்.”
ஒருவரேபலகிரெடிட்கார்டுகளைவைத்திருப்பதுநல்லதா?
‘‘ஒருவர்பலகிரெடிட்கார்டுகளைவைத்திருக்கவேண்டியதில்லை. ஏனென்றால்பலநேரங்களில்மாதம்செலுத்தவேண்டியதவணைதவறிவிடுவதற்குவாய்ப்பிருக்கிறது.அத்துடன்ஓர்ஒழுங்குஇல்லாமல்பலஇடங்களில்அநாவசியமானசெலவுகள்ஏற்படுவதற்கானவாய்ப்புகள்உள்ளன. உங்களுக்குசுயகட்டுப்பாடுஇருக்கும்பட்சத்தில்ஒன்றுக்குமேற்பட்டகார்டுகள்வைத்துக்கொள்ளலாம். இருந்தாலும்இரண்டுக்கும்மிகாமல்இருப்பதுசாலச்சிறந்தது.”
கிரெடிட்கார்டுவாங்கஇதற்குமுன்னால்கடன்வாங்கியிருக்கவேண்டுமா?
“கிரெடிட்கார்டுகிடைப்பதற்கு, ஒருவர்கடன்வாங்கிஅதைத்திருப்பிச்செலுத்திஇருக்கவேண்டியஅவசியமில்லை. பலர், நிதிரீதியாகபலமாகஇருப்பார்கள். அவர்கள்கடன்வாங்கவேண்டும்என்றசூழ்நிலைஏற்பட்டிருக்காது. இதுமாதிரியானவர்களுக்குஅவர்களுடையவருமானத்தின்அடிப்படையில்கிரெடிட்கார்டுகொடுக்கப்படுகிறது.”
கிரெடிட்கார்டு
ஆண்டுசந்தாஇல்லாமல்கிரெடிட்கார்டுகிடைக்குமா?
“உங்களுடையவருமானம்அதிகமாகஇருக்கும்பட்சத்தில், ஆண்டுச்சந்தாஇல்லாமல்உங்களுக்குகிரெடிட்கார்டுகிடைக்கக்கூடும். இன்றைக்குசிலபொதுத்துறைசார்ந்தவங்கிகள்ஆண்டுசந்தாஅடிப்படையில்கிரெடிட்கார்டுகொடுக்கின்றன. ஆண்டுச்சந்தாஇல்லாமல்வாங்கினாலும்அதற்கானபயன்பெரியஅளவில்மாற்றம்இருப்பதில்லை.”
கிரெடிட்கார்டுக்குவிண்ணப்பிக்கும்போதுகவனிக்கவேண்டியவிஷயங்கள்என்னென்ன?
“கிரெடிட்கார்டுவாங்குவதற்குமுன்பாகபணவிஷயத்தில்உங்களுக்குசுயக்கட்டுப்பாடுஇருக்கிறதா, உங்களுக்குமாதவருமானத்தில்சேமிக்கும்பழக்கம்இருக்கிறதாஅல்லதுகுடும்பச்செலவுபோகஏதேனும்உபரிநிதிஇருக்கிறதாஎன்பதைஉறுதிசெய்தபின்கிரெடிட்கார்டுவாங்குவதைப்பற்றிசிந்திக்கவேண்டும். ஏனென்றால், உங்களிடம்மாதச்சேமிப்புபழக்கம், உபரிநிதிஇல்லைஎன்றால், நீங்கள்கிரெடிட்கார்டுமூலம்கடனாளிஆவதுஉறுதி.”
கிரெடிட்கார்டைப்பயன்படுத்தும்போதுஎடுக்கவேண்டியமுன்எச்சரிக்கைநடவடிக்கைகள்என்னென்ன?
“நிதிப்பரிவர்த்தனைகள்அதிகளவில்டிஜிட்டல்மயமாகிஇருக்கிறது. கூடவே, மோசடிகளும்அதிகரித்துவிட்டன. உங்களுடையகிரெடிட்கார்டைஉபயோகிக்கும்போதுசரியானசெலவுமற்றும்பாதுகாப்பானஇடத்தில்உபயோகிக்கிறீர்களாஎன்றுபார்க்கவேண்டும். அத்துடன்ஏதாவதுபொருள்வாங்கஉபயோகித்தால்உங்கள்மொபைல்எண்ணுக்குவரும்எஸ்.எம்.எஸ்-ஐபார்த்துநீங்கள்செலவுசெய்ததொகைசரியாகஇருக்கிறதாஎன்றுபார்க்கவேண்டும். வெளிநாட்டில்பணப்பரிவர்த்தனைசெய்யும்போதுமிகவும்கவனமாகஇருக்கவேண்டும். இல்லைஎனில், உங்கள்கார்டைஹேக்கிங்செய்யவாய்ப்புள்ளது.
நீங்கள்சராசரியாகமாதச்செலவுஎவ்வளவுசெய்வீர்களோ, அதைப்போல்இரண்டு, மூன்றுமடங்குகார்டுலிமிட்வைத்துக்கொள்வதுநல்லது. உங்கள்கார்டில்நீங்கள்செலவுசெய்யாமல்ஏதேனும்எஸ்.எம்.எஸ்வந்தால், உடனடியாககிரெடிட்கார்டுகம்பெனியைஅணுகி, புகார்தெரிவிப்பதுஅவசியம்.”
கிரெடிட்கார்டில்குறைந்தபட்சதொகையைத்தொடர்ந்துகட்டிவருவதுநல்லதா?
‘‘குறைந்தபட்சதொகையைத் (minimum due) தேர்வுசெய்துகிரெடிட்கார்டில்திருப்பிச்செலுத்துவதுமிகவும்அபாயகரமானது. ஏனென்றால், கிரெடிட்கார்டின்வட்டிவிகிதம்மிகவும்அதிகமானது. முழுப்பணத்தையும்திருப்பிச்செலுத்தஇயலாதபோதுகிரெடிட்கார்டுநிறுவனத்தைஅணுகி, அவர்களிடம்பாக்கிதொகையைத்தவணைக்கடனாகமாற்றுவதுபுத்திசாலித்தனம்.”
நான்வாங்கியகிரெடிட்கார்டுகடனைசிலகாரணங்களால்குறைந்தபட்சதவணையைக்கூடகட்டமுடியாதநிலையில்இருக்கிறேன். நான்என்னசெய்யவேண்டும்?
“கோவிட்-19 வைரஸ்பரவல்போன்றஎதிர்பாராதநெருக்கடியானகாலகட்டத்தில்கிரெடிட்கார்டுகுறைந்தபட்சதொகைசெலுத்தமுடியவில்லைஎனில், அதைஎப்படியாவதுஅடைக்கஏற்பாடுசெய்யவும். காரணம், ஆண்டுக்குகுறைந்தபட்சவட்டி 36 – 45% வரைவசூலிக்கப்படுவதாகும். இந்தக்கடனைஅடைக்கவேலைபார்க்கும்நிறுவனத்தில்கடன்வாங்கலாம்அல்லதுநீங்கள்நல்லநிறுவனத்தில்பணிசெய்வதாகஇருந்தால், பர்சனல்லோன்வாங்கலாம். இதைவிடஉங்களிடம்தங்கம்இருந்தால், அதைஅடகுவைத்துகிரெடிட்கார்டுக்கானதொகையைத்திரும்பக்கட்டிவிடலாம். தங்கநகைகடனுக்கானவட்டிவிகிதம்மிகவும்குறைவுஎன்பதால், அதைத்தேர்வுசெய்வதுலாபகரமாகஇருக்கும்.”
கிரெடிட்கார்ட்டில்பொதுவாகசெய்யும்தவறுகள்என்னென்ன?
“சுயக்கட்டுப்பாடுஇல்லாதவர்கள்அதிகமாகச்செலவுசெய்வதற்குவாய்ப்புள்ளது. கையில்பணம்இருந்தால்அதற்குஏற்றாற்போல்செலவுசெய்வதற்குஒருகட்டுப்பாடுஇருக்கும். கிரெடிட்கார்டில்லிமிட்சிலலட்சம்இருந்தால்தேவையில்லாதசெலவுகள்செய்யவாய்ப்புள்ளது. உங்களுடையநிதிநிலைசரியில்லாதநிலையில்கிரெடிட்கார்டைவீட்டில்வைத்துவிட்டுஷாப்பிங்செய்யசெல்வதுநல்லது. இல்லைஎனில், நீங்கள்மினிமம்டியூகட்டவேண்டியநிலைக்குத்தள்ளப்படுவீர்கள்.”
அடிஷனல்கிரெடிட்கார்டுஎன்பதுஎன்ன?
“உங்கள்கிரெடிட்கார்டின்மூலம்குடும்பத்தாருக்குயாருக்குதேவையோ, அவர்களுக்குஅடிஷனல்கார்டுவாங்கிக்கொடுக்கமுடியும். கொடுக்கும்போதுகார்ட்லிமிட்டைக்குறைத்துக்கொடுப்பதுநல்லது. இன்றையகாலகட்டத்தில்பிள்ளைகள்படிப்பதற்குவெளியூர்செல்லவாய்ப்புஇருக்கிறது. அப்போதுஅவர்களிடம்போதியபணம்இல்லாமல்இருப்பதற்குவாய்ப்புள்ளது. அதுபோன்றநேரங்களில்இந்தஅடிஷனல்கார்டுபயனுள்ளதாகஇருக்கும்.’’
அடிக்கடிபயணம்மேற்கொள்பவர்களுக்குஎந்தமாதிரியானகிரெடிட்கார்டுதேவைப்படும்?
‘‘கிரெடிட்கார்டைஉபயோகிக்கும்போதுஅதற்காககிரெடிட்பாயின்ட்கள்கொடுப்பதுவழக்கம். இதுஒருவியாபாரஉத்தி. உங்கள்கிரெடிட்கார்டுவகையைப்பொறுத்துஅதற்கானரிவார்ட்பாயின்ட்கள்கிடைக்கும். நீங்கள்அதிகம்பயணம்செய்வதாகஇருந்தால், அதற்காகஉள்ளஸ்பெஷல்கார்டைவாங்கிக்கொள்ளவும். நீங்கள்நினைத்தநேரம்எல்லாம்பயணம்செய்பவராகஇருந்தால், ஏர்போர்ட்லவுன்ச்சில் (lounge) உணவுஉட்கொள்ளமுடியும். இதற்கானசெலவுமிகமிகக்குறைவு. இந்தகார்டுஇருந்தால், அளவில்லாஉணவுகளைரூ.2 – 25-க்குசாப்பிடமுடியும்.”
சிறுவர்களுக்குகிரெடிட்கார்டுவாங்கமுடியுமா?
“சிறுவர்களுக்குத்தனியாககிரெடிட்கார்டுவாங்கஇயலாது. பெற்றோர், அவர்களுடையகார்டின்மூலம்அடிஷனல்கார்டுகளைப்பெற்றுபிள்ளைகளுக்குக்கொடுக்கமுடியும்.
கிரெடிட்கார்டில்எப்போதுபணம்எடுத்துச்செலவுசெய்யலாம்?
“எமர்ஜென்சிகாலகட்டத்தில்உங்களிடம்பணம்இல்லைஎன்றால், அத்துடன்வேறெந்தவாய்ப்பும்இல்லைஎன்கிறபட்சத்தில்மட்டுமேகிரெடிட்கார்டில்பணம்எடுப்பதுபற்றியோசிக்கவேண்டும். பணம்எடுத்தநாளிலிருந்தேவட்டிபோடுவதுதொடங்கிவிடும். இதைமனதில்வைத்துக்கொண்டுபணத்தைஏ.டி.எம்மில்எடுக்கவேண்டும்.”
கிரெடிட்கார்ட்டைப்பயன்படுத்துவதுநல்லதா, கெட்டதா?
“கிரெடிட்கார்டுவாங்குவதில்தவறில்லை. எனக்குதெரிந்தஒருநபருக்குபலஆண்டுகளுக்குமுன்புஇரவில்அவர்தந்தையைஆஸ்பத்திரியில்சேர்க்கவேண்டும். ஆனால், அப்போதுஅவரிடம்பணம்இல்லை. இப்போதுஇருப்பதுபோல்அப்போதுஅவ்வளவாகஏ.டி.எம்வசதியும்இல்லை. கிரெடிட்கார்டுஇருந்ததால்அவர்தந்தையின்உயிரைக்காப்பாற்றமுடிந்தது. எல்லாவற்றிலும்நல்லதுகெட்டதுஇருக்கிறதுஅதைஆராய்ந்துஅதைஉபயோகிப்பதுபுத்திசாலித்தனம்.”
THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 03.04.2021 WRITTEN BY MR. SURESH PARTHASARATHY.