• Home
  • About Us
    • About us
    • Awards & Recogintion
  • Services
  • Why My Assets Consolidation
  • Blog
  • Media
    • Electronic Media
    • Educational Media
  • Financial Calculators
  • Contact us
  • Login

MULTICAP VS FLEXICAP

  • Home
  • Mutual Fund
  • MULTICAP VS FLEXICAP
Published by myassets-admin on August 21, 2021
Categories
  • Mutual Fund
Tags

கே.செந்தில்குமரன், பழனி.

அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் மல்ட்டி கேப் ஃபண்ட், ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் இதில் எது அதிக வருமானத்தைக் கொடுக்கும்? ஒருவரின் போர்ட்ஃபோலியோவில் மல்ட்டிகேப் ஃபண்ட், ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் முதலீடு எத்தனை சதவிகிதம் இருக்க வேண்டும்?

சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், Myassetsconsolidation.com

“சில ஆண்டுகளுக்கு முன்பு நிறைய ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டுகள் இருந்தன. பின்பு செபி அமைப்பின் விதிமுறை காரணமாக அவை மல்ட்டி கேப் ஃபண்டுகளாக அவதாரம் எடுத்தன. இருப்பினும், அதில் ஏற்பட்ட சில சிக்கல்களுக்காக மறுபடியும் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் சிற்சில மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

மல்ட்டிகேப் ஃபண்ட் அதிகபட்சம் 75% பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்; ஆனால், ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டில் 65% முதலீடு செய்தாலே போதும். அதேபோல், மல்ட்டி கேப் ஃபண்டில் தலா 25% லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும். ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டில் இந்த விதிமுறைகள் இல்லை. ஆகையால், ஃபளெக்ஸிகேப் ஃபண்டுகளில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கேற்ப, லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய முடியும். அதனால், ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டில் அதிக வருமானம் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

முதலீடு செய்வதற்கு ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது. சராசரியாக ஒருவர் 30-லிருந்து 40 வயதுக்குள் இருந்தால், அவர்கள் 35% – 40% வரை அவர்களுடைய போர்ட்ஃபோலியோ வில் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.”

THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 21.8.2021 WRITTEN BY MR. SURESH PARTHASARATHY.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

MyAssetsConsolidation helps you consolidate all your financial assets in one place. We help you identify where your income disappears by analysing your expenses, and also help you to identify the best investment option.We can also help you with loans and restructure the existing loans. Being a financial planner, I will mentor you towards goal-based investments.We offer online mutual fund platform to invest with ease and provide customised software to monitor your portfolio 24*7.With our review strategy we will help you to book profits at appropriate time.

CONNECT WITH US

CONTACT DETAILS

  • Office Address:
  • New No.72, Old No.47, M G Road Vannanthurai, Thiruvanmiyur, Chennai-600041, Tamilnadu.
  • Phone: +91 9840454737
    +91 9940478287

SOCIAL MEDIA

© Copyright Protected