
சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், Myassetsconsolidation.com
“எந்த ஒரு செயலிலும் அனுபவம்தான் நம் செயலைத் தொடர்ந்து செய்ய வைக்கும். பங்குச் சந்தை முதலீடு அதேபோலத்தான். முதல் அனுபவம் மகிழ்ச்சி தரும்படி அமையவில்லை எனில், உங்களுக்கு அதன் மீது இருக்கும் நாட்டம் மிகவும் குறைந்துவிடும். ஆகையால், முதலில் இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன், அதைவிட ரிஸ்க் குறைவான பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்யவும். ஏனெனில், கடந்த 10 ஆண்டுகளில் இண்டெக்ஸ் ஃபண்ட் தந்திருக்கும் வருமானம் ஏறக்குறைய பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் வருமானத்துக்கு நிகரானதாகும். ஆகையால், உங்கள் முதல் முதலீடு பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் இருக்கட்டும். 1 – 2 ஆண்டுகளுக்குப் பிறகு, லார்ஜ்கேப் ஃபண்ட் முதலீட்டைத் தொடங்குங்கள். பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க மிக முக்கியமான தேவை, பொறுமையாக இருப்பதுதான்.’’
THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 11.09.2021 BY MR.SURESH PARTHASARATHY.