இப்போது ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் அளவு பெரிதாகிவிட்டதால், அதன் செயல்பாடு
குறைய வாய்ப்பிருக்கிறது.

முதலீடு
என் வயது 60. நான் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். என் முதலீடுகள்
பின்வருமாறு…

முதலீடு
கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்
ரூ.1,000, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனீட்டீஸ் ஃபண்ட் – ரூ.1,000,
ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் ரூ.1,000, டாடா ஹைபிரிட் ஃபண்ட் ரூ.1,000, எல்
அண்ட் டி ஹைபிரிட் ரூ.1,000, ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,000,
யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,000, யூ.டி.ஐ எம்.எம்.சி ஃபண்ட் ரூ.1,000, ஐ.டி.எஃப்.சி
ஸ்டெர்லிங் வேல்யூ ஃபண்ட் ரூ.1,000, சுந்தரம் மிட்கேப் ஃபண்ட் ரூ.1,000, எஸ்.பி.ஐ
மல்டிகேப் ஃபண்ட் ரூ.1,000, டாடா பார்மா ஃபண்ட் ரூ.1,000 மற்றும் 2016-ம் ஆண்டு
முதல் ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,000,
டி.எஸ்.பி பி.ஆர் டாப் 100 ஃபண்ட் ரூ.1,000, 2017-ம் ஆண்டு முதல் ரிலையன்ஸ்
மல்டிகேப் ரூ.1,000, ஐ.டி.எஃப்.சி மல்டிகேப் ரூ.2,000. என் போர்ட்ஃபோலியோவில்
ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்பதைச் சொல்லவும்.
– பன்னீர்செல்வம், மெயில் மூலமாக
Submit
“ஃபண்ட் கிளினிக் பகுதியில் நாம் தொடர்ந்து சொல்லி வருவதை நீங்கள் கவனிக்க
வேண்டும். அதிக ஃபண்டுகளை வைத்திருப்பது முதலீட்டுப் பரவலாக்கம் கிடையாது.
ஒருவரின் போர்ட்ஃபோலியோவில் அதிகபட்சம் 10 ஃபண்டுகள் இருந்தாலே போதும்.
யூ.டி.ஐ எம்.என்.சி ஃபண்ட் மற்றும் டாடா பார்மா ஃபண்டை அடுத்த ஆண்டு
மார்க்கெட் ஏறுமுகமாக இருக்கும்போது விற்றுவிடவும். உங்களுக்கு 60 வயதுக்குமேல்
ஆகிவிட்டதால், நீங்கள் டைவர்சிஃபைடு ஃபண்டுகளில் மட்டும் முதலீடு செய்யுங்கள்.
ஃப்ராங்க்ளின் ஃபண்ட் ஹவுஸ் நல்ல ஃபண்டுகளைக் கொடுத்திருக்கிறது. ஆனால்,
அண்மைக்காலமாக அவற்றின் வருமானம் குறைந்திருக்கிறது. அதேபோல்தான்,
சுந்தரம் மிட்கேப் ஃபண்டின் செயல்பாடும் உள்ளது. உங்களுக்கு உகந்த ஃபண்டுகள்
அட்டவணை-1-ல் தரப்பட்டுள்ளன. பரிந்துரை செய்திருக்கும் ஃபண்டுகளைத் தவிர,
மீதமுள்ள ஃபண்டுகளிலிருந்து வெளியேறிவிடவும்.’’
முதலீடு
நான் அரசுப் பணியில் இருக்கிறேன். என் வயது 53. நான் கடந்த நான்கு
ஆண்டுகளாகப் பின்வரும் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு
செய்துவருகிறேன்.
யூ.டி.ஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.1,000, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப்
ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.3,000, மிரே அஸெட் இந்தியா லார்ஜ்கேப் ஃபண்ட்
ரூ.2,000, எஸ்.பி.ஐ ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட் ரூ.3,000. தவிர, கூடுதலாக மாதம்
ரூ.10,000-ஐ அடுத்த ஐந்தாண்டுகளுக்கு முதலீடு செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன்.
நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகளைத் தொடரலாமா, புதிதாக எந்தெந்த
ஃபண்டுகளில் முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும்?
– டி.அரவிந்தன், மெயில் மூலமாக
ஒருவரின் போர்ட் ஃபோலியோவில் அதிகபட்சம் 10 ஃபண்டுகள் வரை இருந்தாலே
போதும்!
“உங்கள் போர்ட்ஃபோலியோ பரவலாகவும் சரியாகவும் இருக்கிறது. இப்போது
ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் அளவு பெரிதாகிவிட்டதால், அதன் செயல்பாடு குறைய
வாய்ப்பிருக்கிறது. கடந்த ஓராண்டுக் காலத்தில் அது நன்றாகவே தெரிகிறது.
ஆகையால் இந்த எஸ்.ஐ.பி-யை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக கோட்டக் எமெர்ஜிங்
ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யவும். நீங்கள் புதிதாக முதலீட்டைத்
தொடங்கவிருக்கும் 10,000 ரூபாய்க்கான பரிந்துரை அட்டவணை-2-ல்
தரப்பட்டிருக்கிறது. அதன்படி முதலீடு செய்யவும்.”
நான் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிவருகிறேன். என் வயது 39. மாத
வருமானம் ரூ.65,000. வாடகை வீட்டில் வசிக்கிறேன். வாடகை ரூ.8,000. நான்கு
வயது, இரண்டு வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். 2014-ம் ஆண்டு
முதல் எஸ்.ஐ.பி-யில் முதலீடு செய்துவருகிறேன். குழந்தைகளின்
மேற்படிப்புக்காகவும், வீடு வாங்குவதற்கான முன்பணத் தொகையைச் சேர்க்கவும்
முதலீடு செய்துவருகிறேன். சொந்தமாக ஒரு வீடு மற்றும் கார் வாங்க வேண்டும்,
குழந்தைகளின் மேற்படிப்புக்காகவும் நான் முதலீடு செய்துவருகிறேன்.என்னுடைய
முதலீடுகள்…
டாடா ஹைபிரிட் ஃபண்ட் ரூ.3,000, சுந்தரம் மிட்கேப் ஃபண்ட் ரூ.2,000, ரிலையன்ஸ்
டாக்ஸ் சேவர் ரூ.1,000, நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ரூ.2,000, ஹெச்.டி.எஃப்.சி
சில்ட்ரன் கிஃப்ட் பிளான் ரூ.4,000, ஐ.சி.ஐ.சி.ஐ சில்ட்ரன்ஸ் எஜுகேஷன் பிளான்
ரூ.4,000. இவற்றில் சில்ட்ரன் ஃபண்டுகள் நல்ல வருமானம் கொடுத்திருக்கின்றன.
என் முதலீட்டில் வேறு மாற்றம் ஏதும் செய்ய வேண்டுமா?
– ஏ.குமரேசன், புதுச்சேரி
“சில நேரங்களில் நாம் முதலீடு செய்யும் ஃபண்டுகள் சரியாகச் செயல்படுகின்றனவா
இல்லையா என்பதைப் பலரும் பார்ப்பதில்லை. சிலர் பார்த்தாலும் அந்த
ஃபண்டுகளிலிருந்து வெளியேறுவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில்
இருக்கிறார்கள். நீங்களும் அந்த வகையில்தான் இருக்கிறீர்கள்.

முதலீடு
உங்கள் முதலீட்டில் டாடா ஹைபிரிட், சுந்தரம் மிட்கேப், நிப்பான் இந்தியா
ஸ்மால்கேப் போன்றவை கடந்த சில ஆண்டுகளாகவே சரியான வருமானம்
தரவில்லை. டாடா ஹைபிரிட் ஃபண்டுக்கு பதிலாக மோதிலால் ஹைபிரிட் ஃபண்டில்
ரூ.2,000, சுந்தரம் மிட்கேப் ஃபண்டுக்குப் பதிலாக மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்டில்
ரூ.3,000 என முதலீட்டை மாற்றியமைக்கவும். டாடா ஹைபிரிட், சுந்தரம் மிட்கேப்
ஃபண்டுகளில் இதுவரை உள்ள தொகையையும் பரிந்துரைத்திருக்கும் ஃபண்டுகளுக்கு
மாற்றிக்கொள்ளவும். முதல் மகனின் மேற்படிப்புக்கு இந்த முதலீட்டைப்
பயன்படுத்திக்கொள்ளலாம்.
நீங்கள் குறிப்பிட்டதுபோல், ஹெச்.டி.எஃப்.சி சில்ட்ரன் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ
சில்ட்ரன் ஃபண்ட் இரண்டும் நல்ல வருமானம் கொடுத்துள்ளன. இரண்டு
ஃபண்டுகளும் ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை நல்ல செயல்பாட்டில் இருக்கின்றன.
இதற்கு முக்கியக் காரணம், முதலீட்டாளர்கள் அவர்கள் இலக்கு வரும்வரை பணத்தை
எடுப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பது. வெளியேறுவதற்கான கட்டணம் (Exit Load)
இருப்பதும் முக்கியமான காரணம். இந்த இரண்டு ஃபண்டுகளிலும் தொடர்ந்து
முதலீடு செய்துவரவும்.

முதலீடு
நீங்கள் இப்போது வீடு வாங்கும்பட்சத்தில் ரூ.36 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால்,
20 ஆண்டு காலம் கடனைத் திருப்பி அடைக்கும் வகையில் மாதம் ரூ.31,000 இ.எம்.ஐ
செலுத்த வேண்டியிருக்கும். இரண்டாவது குழந்தையின் படிப்புக்கு மாதம் ரூ.11,000
சேர்க்க வேண்டியிருக்கும். ரிலையன்ஸ் டாக்ஸ் சேவர், நிப்பான் இந்தியா ஸ்மால்கேப்
ஃபண்டுகளில் செய்துவரும் முதலீடு ரூ.3,000 போக, கூடுதலாக ரூ.8,000
முதலீட்டைத் தொடங்க வேண்டும். இதற்கான பரிந்துரை அட்டவணை-3-ல்
தரப்பட்டுள்ளது.’’
This article was published i nanyam vikatan on jan 5th .