
நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான்கு ஃபண்டுகளில் முதலீடு
செய்துவருகிறேன். மாதம் ரூ.10,000 வீதம் ஒவ்வொரு ஃபண்டிலும் முதலீடு
செய்கிறேன். என் மகனின் மேற்படிப்பு மற்றும் திருமணத்துக்காக இந்த முதலீட்டைச்
செய்துவருகிறேன். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை முதலீட்டைத்
தொடர்வதற்குத் திட்டமிட்டிருக்கிறேன். நான் முதலீடு செய்துவரும்
ஃபண்டுகளிலேயே முதலீட்டைத் தொடரலாமா அல்லது முதலீட்டில் மாற்றங்கள்
ஏதேனும் செய்ய வேண்டுமா?
நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள்… டி.எஸ்.பி ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ்
ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், கோட்டக்
ஸ்டாண்டர்ட் மல்டிகேப் ஃபண்ட், மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட்.
– என்.சுபகுமார், மெயில் மூலமாக
“முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு முன்னர் அவர்கள் முதலீடு செய்ய விரும்பும்
ஃபண்டில் எவ்வளவு லார்ஜ்கேப், மிட் அண்ட் ஸ்மால்கேப் அலோகேஷன் இருக்கிறது
என்பதைக் கண்டறிய வேண்டும். முதலீடு செய்யும் ஃபண்டுகளில் அலோகேஷன் ஒரே
மாதிரியாக இருக்கும்பட்சத்தில் வருமானம் மிகக் குறைவாக இருக்கும். உங்களுடைய
ரிஸ்க் எடுக்கும் திறன் அதிகமாக இருந்து, முதலீடு கன்சர்வேட்டிவ்வாக இருந்தால்
உங்கள் இலக்குகளை அடைவதற்கு அதிக முதலீடு செய்ய வேண்டும்.
அதேவேளையில், உங்கள் இலக்கு 10 ஆண்டு காலமாக இருந்தால், அதிக முதலீட்டை
மிட் அண்ட் ஸ்மால்கேப்பில் செய்வது நல்லது.
நீங்கள் லார்ஜ்கேப்பில் 20%, மல்டிகேப்பில் 35%, மிட்கேப்பில் 30%, ஸ்மால்கேப்பில்
15% என முதலீட்டை அமைத்துக்கொள்ளவும். இப்படிச் செய்தால் உங்கள்
போர்ட்ஃபோலியோ அதிக வருமானம் கொடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
அதேவேளையில், ஸ்மால்கேப் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிக
அளவில் குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே, உங்களுக்கு 20 – 30% வருமானம்
ஸ்மால்கேப்பில் கிடைத்தால் அதை ப்ராஃபிட் புக் செய்து, மறு முதலீடு செய்வது
அவசியம். இப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் லாபத்தைத் தக்கவைத்துக்கொள்ள
முடியும். உங்களுக்கான பரிந்துரைகள் அட்டவணை-1-ல் தரப்பட்டுள்ளன. அதன்படி
முதலீட்டை மாற்றி அமையுங்கள்.”
கடன் ஃபண்டுகள், லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்வது என்பது பாதுகாப்பானது
என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்!
முதலீடு
எனக்கு 57 வயது. கீழ்க்காணும் மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில்
மாதந்தோறும் ரூ.20,000 முதலீடு செய்துவருகிறேன்.
ஹெச்.டி.எஃப்.சி கார்ப் பாண்ட் ஃபண்ட் ரூ.1,500, ஹெச்.டி.எஃப்.சி ஷார்ட் டேர்ம்
டெப்ட் ஃபண்ட் ரூ.1,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஹைப்ரிட் 95 ஃபண்ட்
ரூ.2,500, ஆக்ஸிஸ் பேங்கிங் அண்ட் பி.எஸ்.யூ டெப்ட் ஃபண்ட் ரூ.1,000,
ஃப்ராங்க்ளின் இந்தியா அல்ட்ரா ஷார்ட் பாண்ட் ஃபண்ட் ரூ.1,000, ஆதித்ய பிர்லா
கார்ப் பாண்ட் ஃபண்ட் ரூ.1,000, டி.எஸ்.பி டாக்ஸ் சேவர் ஃபண்ட் ரூ.3,000, டாடா
இந்தியா கன்ஸ்யூமர் ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் ஃபோகஸ்டு 25 ஃபண்ட் ரூ.1,000,
எல் அண்ட் டி எமெர்ஜிங் பிசினஸ் ஃபண்ட் ரூ.1,000, மிரே அஸெட் டாக்ஸ் சேவர்
ஃபண்ட் ரூ.2,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் டிஜிட்டல் இந்தியா ஃபண்ட் ரூ.1,000,
ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. டெக்னாலஜி ஃபண்ட் ரூ.1,000, எஸ்.பி.ஐ டெக்னாலஜி
ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.1,000.
இவை தவிர, நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப்
ஃபண்ட் மற்றும் எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ஆகியவற்றிலிருந்த முதலீட்டை
நிப்பான் இந்தியா கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி கோல்டு ஃபண்ட்,
எஸ்.பி.ஐ கோல்டு ஃபண்ட் ஆகியவற்றுக்கு சுவிட்ச் ஓவர் செய்து முதலீட்டைத்
தொடராமல் விட்டு வைத்திருக்கிறேன். என் இலக்கு மூன்று ஆண்டுகள். எனவே,
மேற்கண்ட முதலீடுகளை ஆய்வுசெய்து சீரமைக்க ஆலோசனை தாருங்கள்.
– பாரதி முனி, மதுரை-3
“டெக்னாலஜி செக்டார் ஃபண்டுகள் ஒரு காலகட்டத்தில் நல்ல வருமானம் கொடுத்தன.
ஆனால், அண்மைக்காலத்தில் ஐ.டி துறை பங்குகள் அவ்வளவாக வருமானம்
கொடுப்பதில்லை. அதோடு ஐ.டி துறை பங்குகளில் பெரும்பகுதியாக இன்ஃபோசிஸ்
மற்றும் டி.சி.எஸ் நிறுவனப் பங்குகளில்தான் ஃபண்டுகள் முதலீடு செய்கின்றன. இந்த
இரண்டு நிறுவனப் பங்குகளும் நன்றாகச் செயல்படவில்லை என்றால், உங்களுக்கு
வருமானம் கிடைப்பது கடினமாகிவிடும். எனவே, ஐ.டி செக்டாரில் முதலீடு
செய்வதைத் தவிர்க்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டு காலத்தில் சென்செக்ஸ் 14%
வருமானம் தந்திருக்கிறது.

முதலீடு
அதே வேளையில், ஐ.டி செக்டார் வருமானம் மிகவும் மோசமாக இருக்கிறது.
இத்துடன் முக்கியமான ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும். சென்செக்ஸுடன்
ஒப்பிடும்போது, ஐ.டி ஃபண்ட் ரிஸ்க் அதிகம். உங்கள் இலக்குகளைவைத்து
உங்களுக்கான பரிந்துரைகளைக் கொடுத்திருக்கிறேன். அட்டவணை-2-ல்
தந்திருப்பதைப் பாருங்கள்.’’


நான் கடந்த இரண்டு மாதங்களாகத்தான் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டைச்
செய்து வருகிறேன். நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள் சரியானவைதானா என
ஆராய்ந்து சொன்னால் உதவியாக இருக்கும்.
நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள்… ஆக்ஸிஸ் ஷார்ட் டேர்ம் ஃபண்ட் ரூ.1,000,
ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. யூ.எஸ் புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.500, மோதிலால் ஆஸ்வால்
லார்ஜ்கேப் அண்ட் மிட்கேப் ஃபண்ட் ரூ.500, நிப்பான் இந்தியா லிக்விட் ஃபண்ட்
ரூ.100, குவான்ட் லிக்விட் பிளான் ரூ.100.
– கே.மகாராஜா, மெயில் மூலமாக
“மிகச் சிறிய தொகையை முதலீடு செய்யும் நிலையிலும் இன்டர்நேஷனல் ஈக்விட்டி
ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என நினைத்து ஃபண்டைத் தேர்வு
செய்திருக்கிறீர்கள். நீங்கள் முதலீடு செய்துவரும் ஃபண்ட் கடந்த ஐந்து ஆண்டுகளில்
சிறந்த வருமானத்தைக் கொடுத்திருக்கிறது. இருந்தாலும், அமெரிக்கச் சந்தை எல்லா
நேரத்திலும் ஏற்றத்தில் இருக்கும் என்று சொல்ல முடியாது; அடுத்த சில ஆண்டுகளில்
நீங்கள் முதலீடு செய்திருக்கும் ஃபண்ட் எவ்வளவு வருமானம் கொடுக்கும் என்பதைப்
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து
நீங்கள் முடிவெடுத்துக்கொள்ளவும்.

Investment
பொதுவாக, அனைத்து முதலீட்டாளர்களும் கவனத்தில்கொள்ள வேண்டிய ஒரு
விஷயம்… கடன் ஃபண்டுகள், லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்வது என்பது
பாதுகாப்பானது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலீட்டுப் பரவலாக்கம்
எனப் பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். அது தவறு.
நீங்கள் இந்த விஷயத்தைப் புரிந்துகொண்டு முதலீடு செய்யவும். நீங்கள் தற்போது
செய்துவரும் குவான்ட் லிக்விட் ஃபண்டில் தொடர்ந்து முதலீட்டைச் செய்யலாம்.
ஆக்ஸிஸ் ஷார்ட் டேர்ம் ஃபண்ட் முதலீட்டையும் தொடரலாம்.”
தொகுப்பு: கா.முத்துசூரியா
Article by MR. Suresh Parthasarathy published in nanyam vikatan january month